PDF chapter test TRY NOW
காற்றில்லா சுவாசம் என்பது ஆக்ஸிஜன் இல்லாத போது அதாவது காற்றில்லா சூழ்நிலையில் நடைபெறும் சுவாச நிகழ்வாகும். இந்நிகழ்வு உயர் தாவரங்களில் தற்காலிகமானதாகவும் பாக்டீரியா மற்றும் ஈஸ்டில் நிரந்தரமாக நடைபெறும் ஓர் நிகழ்வாகும்.

காற்றில்லாச் சுவாச முறை
1960 ஆம் ஆண்டில் பாஸ்டர் என்பவர் முதன்முறையாக ஈஸ்டில் காற்றில்லா சுவாசத்தை கண்டுபிடித்தார்.
காற்றில்லா சுவாசத்தின் பொதுவான சமன்பாடு:
காற்றில்லா சுவாச முறையில் குளுக்கோஸ் மூலக்கூறானது எத்தனால் அல்லது லேக்டிக் அமிலமாக மாற்றப் படுகின்றது. இதனுடன் கார்பன் டை ஆக்சைடும் வெளியேற்றப் படுகிறது.
குளுக்கோஸ் மூலக்கூறானது காற்றில்லா சுவாச முறையில் சிதைவுற்று கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் எத்தனாலாக மாறுவதே எத்தில் ஆல்கஹால் நொதித்தல் எனப்படும்.

எத்தில் ஆல்கஹால் நொதித்தல்
கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் இறுதியில் உற்பத்தி செய்யப்பட்ட பைருவிக் அமிலமானது லேக்டோ பேசில்லஸ் பாக்டீரியாவால் லேக்டிக் அமிலமாக மாறும் நிகழ்ச்சி லேக்டிக் அமில நொதித்தல் எனப்படும்.

லேக்டிக் அமில நொதித்தல்
சுவாச ஈவு:
சுவாசித்தலின் போது வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்ஸைடு அளவிற்கும் பயன்படுத்த படும் அதாவது எடுத்துக்கொள்ளப் பட்ட ஆக்ஸிஜன் அளவிற்கும் இடையேயுள்ள விகிதமே சுவாச ஈவு என்று அழைக்கப்படுகிறது.
சுவாச ஈவு = வெளியிடப்படும் CO_2 அளவு/எடுத்துக்கொள்ளப்படும் O_2 அளவு