PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
காற்று சுவாசம்:
 
காற்று சுவாசம் என்பது ஆக்ஸிஜன் உள்ள போது நடைபெறும் ஒரு நிகழ்வாகும். செல் சுவாசித்தலின் போது உணவுப் பொருள்களான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள்  முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் ஆற்றலாக வெளியிடப்படுகிறது. காற்று சுவாச முறை சிக்கலான ஒரு நிகழ்வாகும் இவை பெரும்பாலும் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகின்றன. இவை நான்கு படி நிலைகளில் நடைபெறுகிறது.
 
800pxCellularRespirationSimpleew797.png
காற்று சுவாசத்திற்கான பொதுவான சமன்பாடு
காற்றுச் சுவாசத்தின் படிநிலைகள்:
அ. கிளைக்காலிஸிஸ்:
 
1930 ஆம்  ஆண்டில் எம்டன், மேயர்ஹாப் மற்றும் பர்னாஸ் என்ற மூன்று அறிவியலாளர்கள் முதன்முதலில் ஈஸ்ட் செல்லில் கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியைக் கண்டுபிடித்தனர்.  இது செல்லின் சைட்டோபிளாசத்தில் நடைபெறும் நிகழ்ச்சியாகும். "கிளைக்கோ" என்றால் இனிப்பு மற்றும் "லைசிஸ்" என்றால் பிளப்பு என்று பொருள்படும்.
 
கிளை‌க்கா‌லி‌‌ஸி‌ஸ் கா‌ற்று ம‌ற்று‌ம் கா‌‌ற்‌றி‌ல்லா சுவா‌ச‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் பொதுவான ‌ஓர் நிக‌ழ்வு ஆகு‌‌ம். இவை குளுக்கோஸ் பிளப்பு எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில்  இது ஒரு மூலக்கூறு குளுக்கோஸ், இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலமாகப் பிளக்கப்படும் நிகழ்ச்சியாகும். அதாவது 6\ கார்பன் சேர்மமான  குளுக்கோஸ் , 3 கார்பன் கொண்ட இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலமாக மாற்றம் அடைகின்றது.
 
YCIND20220821_4275_Plant anatomy_03.png
கிளை‌க்கா‌லி‌‌ஸி‌ஸ்
 
ஆ. கிரப் சுழற்சி:

1937 ஆம் ஆண்டில் சர்ஹேன்ஸ் அடால்ப் கிரெப்ஸ் சுழற்சியைக் கண்டுபிடித்தார்.  இச்சுழற்சி மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்மத்தில் நடைபெறும் ஓர் முக்கியமான நிகழ்வாகும்.
கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் இறுதியில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு மூலக்கூறுகள் பைருவிக் அமிலமானது முழுவதுமாக ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீராக மாறும் சுழற்சிக்கு கிரப் சுழற்சி எனப்படும்.
கிரப் சுழற்சியின் போது முதலில் உருவாகின்ற விளைப்பொருள்கள் சிட்ரிக் அமிலம் ஆகும். எனவே இது சிட்ரிக் அமில சுழற்சி எனவும் அழைக்கப் படுகிறது.
 
அதே போன்று இச்சுழற்சியின் போது உருவாகின்ற சிட்ரிக் அமிலம் 3 கார்பாக்ஸிலிக் தொகுதியைக் கொண்டுள்ளன . எனவே இந்நிகழ்வு ட்ரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி அல்லது TCA சுழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.
 
YCIND20220821_4275_Plant anatomy_04.png
கிரப் சுழற்சி
 
இ. எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு:
 
உட்புற சவ்வான மைட்டோகாண்ட்ரியாவின் எலக்ட்ரான்களைக்  கடத்தும்  அமைப்பான எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி காணப்படுகிறது. கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சி மற்றும் கிரப் சுழற்சியின் போது உருவான NADPH_2  மற்றும் FADPH_2  விலுள்ள ஆற்றலானது இந்த நிகழ்வில் வெளியேற்றப் பட்டு அவை NAD+ மற்றும் FAD+ ஆக ஆக்சிஜனேற்றமடைகின்றன. மேலும் இந்த நிகழ்வில் போது உருவான ஆற்றல் ADP ஆல்  எடுத்துக்கொள்ளப்பட்டு ATP ஆக உருவாகின்றது. இந்த நிகழ்வு ஆக்சிகரண  பாஸ்பேட் சேர்ப்பு என்று அழைக்கப் படுகின்றது. மேலும் எலக்ட்ரான் கடத்தும் அமைப்பின் கடைசியில் வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானை ஆக்ஸிஜன் எடுத்துக் கொள்ளும் பின்பு அது நீராக ஒடுக்கமடைகின்றது.
 
YCIND20220821_4318_Plant anatomy_051.png
எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு