PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநாம் ஏற்கெனவே தாவரங்களின் உள்ளமைப்பியலின் கீழ் திசுக்கள், திசுத்தொகுப்புகள் மற்றும் அதன் வகைகள், வாஸ்குலார் திசுத் தொகுப்பு, இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலைத் தாவர வேர், தண்டு, இலைகளுக்கிடையேயுள்ள வேறுபாடுகள் பற்றி இப்பாடத்தின் முந்தைய பகுதியில் தெரிந்து கொண்டோம். இருப்பினும், தாவரங்களில் காணப்படும் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து நாம் அறிந்திருக்கவில்லை.
ஆகவே "தாவர செயலியல்" என்ற தலைப்பின் கீழ் நாம் தாவரங்களில் நிகழும் செயல்பாடுகள், மேலும் அச்செயல்பாடுகள் எங்கே, எவ்வாறு நடக்கிறது என்பதைப் பற்றி இப்பகுதியில் கற்றுக் கொள்ளவிருக்கிறோம்.
தாவர செயலியல் என்றால் என்ன?
தாவர செயலியல் என்பது உயிரணுக்கள், திசுக்கள் மற்றும் உயிரினங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய ஆய்வு ஆகும்.
தாவர உடலியல் என்பது தாவரங்களின் உடலியல் செயல்முறைகள் மற்றும் தாவரங்களின் செயல்பாடுகளைக் கையாளும் ஒரு பிரிவாகும்.
ஒரு தாவரத்தின் செல் அல்லது மூலக்கூறு மட்டத்தில் அதனுடைய மாறுபாடு, அமைப்பு மற்றும் உள் கட்டமைப்பு பற்றி அறிந்து கொள்ள இந்த ஆய்வுகள் உதவுகின்றன. மேலும் இவை தாவரங்கள் உயிருடன் இருப்பதற்குக் காரணமான வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்து காரணிகளையும் குறித்துப் புரிந்து கொள்ளவும் நமக்கு உதவுகின்றன.
Important!
ஜூலியஸ் சாக்ஸ் என்பவர் 'தாவர செயலியலின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்
இந்த பாடத்தின் இப்பகுதியில் நாம் கணிகங்கள், ஒளிச்சேர்க்கை, மைட்டோகாண்ட்ரியா, சுவாசித்தலின் வகைகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவிருக்கிறோம்.
கற்றல் நோக்கங்கள்:
இந்த பாடத்தின் முடிவில் நீங்கள் கற்றுக்கொள்ளவிருப்பது,
- கணிகங்கள்
- பசுங்கணிகத்தின் அமைப்பு மற்றும் பணிகள்
- ஒளிச்சேர்க்கை
- ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடங்கள்
- ஒளிச்சேர்க்கை நிறமிகள்
- ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கு
- ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கும் காரணிகள்
- மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு மற்றும் பணிகள்
- சுவாசித்தலின் வகைகள் - காற்று சுவாசம், காற்றில்லா சுவாசம்
- சுவாச ஈவு