PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தாவரங்கள் எவ்வாறு வெவ்வேறு வண்ணங்களைப் பெற்றிருக்கின்றன என்று நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறீர்களா? தாவரத்தின் பச்சை நிறத்திற்கும், ஒளிச்சேர்க்கைக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
 
கணிகங்கள் எனப்படும் ஒரு நுண்ணுறுப்பு தான் தாவரத்தின் வெவ்வேறு நிறங்களுக்கும், ஒளிச்சேர்க்கை நடைபெறுவதற்கும் மூலகாரணமாய் உள்ளது. இக்கோட்பாட்டில் கணிகங்கள் மற்றும் அதன் வகைகள் குறித்துக் காண்போம்.
தாவரங்கள் மற்றும்  ஆல்காக்களில் காணப்படும் பெரிய  இரட்டை மென்படலத்தால் சூழ்ந்த நுண்ணுறுப்புகள் கணிகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உணவை உற்பத்தி செய்து அதனைச் சேமித்து வைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்துகின்றன.
கணிகங்கள் அவற்றின் நிறத்தைப் பொறுத்து மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன;
  1. பசுங்கணிகம் அல்லது குளோரோபிளாஸ்ட்
  2. வண்ணக்கணிகம் அல்லது குரோமோபிளாஸ்ட்
  3. வெளிர்க்கணிகம் அல்லது லியூக்கோபிளாஸ்ட்
பசுங்கணிகம் அல்லது குளோரோபிளாஸ்ட்:
 
குளோரோபிளாஸ்ட்பச்சை நிற கணிகங்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை ஒளிச்சேர்க்கைக்கான தளங்களாகச் செயல்படுகின்றன.
 
வண்ணக்கணிகம் அல்லது குரோமோபிளாஸ்ட்:
 
குரோமோபிளாஸ்ட்வண்ணக் கணிகங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இவ்வகை கணிகத்தில் கரோட்டினாய்டுகள் எனப்படும் நிறமிகள் இருப்பதால், அவை பூக்கள் மற்றும் பழங்களுக்கு மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தை அளிக்கின்றன.
 
வெளிர்க்கணிகம் அல்லது லியூக்கோபிளாஸ்ட்:
 
லியூக்கோபிளாஸ்ட்நிறமற்ற கணிகங்கள் என்று அழைக்கப்படுகிறது. வெளிர்க்கணிகம் வேர்கள், விதைகள் மற்றும் நிலத்தடி தண்டுகளின் சேமிப்பு செல்களில் காணப்படுகின்றன. இவ்வகை கணிகம் உணவைச் சேமித்து வைக்கும் பணியை மேற்கொள்கின்றன.
 
Important!
கணிகங்கள் தாவரச் செல்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் இவை விலங்குச் செல்களில் காணப்படுவதில்லை.