PDF chapter test TRY NOW
மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு:
நாம் உணவை உட்கொள்வதன் மூலம் ஆற்றலைப் பெறுகின்றோம். செரிமான செயல்பாட்டால், உட்கொள்ளப்பட்ட உணவு குளுக்கோஸாக மாற்றப்படுகின்றது. முந்தைய கோட்பாட்டில், \(ATP\) (Adenosine triphosphate) பற்றி விவாதித்தோம். அதிலிருந்து, செல்கள் தங்களுக்குத் தேவையான ஆற்றலை குளுக்கோஸிலிருந்து நேரடியாகப் பெற முடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். \(ATP\) மூலக்கூறு வடிவத்தில் தான் செல் தங்களுக்குத் தேவையான ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்கிறது எனவே குளுக்கோஸை \(ATP\) மூலக்கூறுகளாக மாற்ற வேண்டும். இந்த செயல்பாடு மைட்டோகாண்ட்ரியா எனப்படும் செல் நுண்ணுறுப்பு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இக் கோட்பாட்டில் மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு மற்றும் பணிகள் குறித்து கற்றுக் கொள்ளப் போகிறோம்.
\(1857\) ஆம் ஆண்டில் கோலிகர் என்பவர் வரித்தசை செல்களில் முதன்முதலில் மைட்டோகாண்ட்ரியாவை கண்டு பிடித்தார். இவை சைட்டோபிளாசத்தில் இழை அல்லது துகள் போன்ற வடிவில் காணப்படும் ஓர் நுண்ணுறுப்பாகும். ஏடிபி என்பது செல்லின் ஆற்றல் நாணயம் என்றும் அழைக்கப்படுகிறது. மைட்டோகாண்ட்ரியாவில் \(ATP\) உற்பத்தி செய்யப் படுவதால் இவை செல்லின் ஆற்றல் மையம் எனவும் அழைக்க படுகின்றன. இவை சுமார் \(0.5\)\(μm\) முதல் \(2.0\)\(μm\) அளவு கொண்டவை. மேலும் மைட்டோகாண்ட்ரியாவில் 60-70% புரதம், 25-30% லிப்பிடுகள், 5-7 % ஆர்என்ஏ, டிஎன்ஏ மற்றும் கனிமங்கள் உள்ளது.
மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு
வெளிப்புற மைட்டோகாண்ட்ரியல் சவ்வு வழவழப்பான தன்மையைக் கொண்டது. இவை அனைத்து மூலக்கூறுகளையும் தன்னகத்தே கடந்து செல்ல அனுமதிக்கிறது. இது என்சைம்கள், புரதங்கள் மற்றும் லிப்பிட்களையும் கொண்டுள்ளது. மேலும் இவை போரின்கள் எனப்படும் புரத மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. இந்த போரின் மூலக்கூறுகள், வெளி மூலக்கூறுகள் செல்வற்கேதுவாக ஓர் கால்வாயாகச் செயல் படுகின்றன.
உட்புற மைட்டோகாண்ட்ரியல் சவ்வில் பல மடிப்புகள் உள்ளன. இது வெளிப்புற மைட்டோகாண்ட்ரியல் சவ்வு போல இல்லாமல் ஒரு தேர்வுகடத்துச் சவ்வாகச் செயல் படுகிறது. அதாவது குறிப்பிட்ட பொருள்களை மட்டுமே இவை உட்செல்ல அனுமதிக்கின்றது. கடத்துப் புரதங்களும், நொதிகளும் இவற்றில் அடங்கும். மேலும் இந்த சவ்வில் 80% லிப்பிடுகள் மற்றும் புரதங்கள் உள்ளது.
கிரிஸ்டே:
மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச் சவ்விலுள்ள விரல் போன்ற நீட்சிகளே கிரிஸ்டே ஆகும். இந்த நீட்சிகள் மைட்டோகாண்ட்ரியாவின் பரப்பளவை அதிகரிக்கின்றது. பல நொதிகளும் இப்பகுதியில் காணப்படுகின்றது.
ஆக்சிசோம்கள் அல்லது F1 துகள்கள்:
உட்புற மைட்டோகாண்ட்ரியல் சவ்விலுள்ள பகுதியில் பல நுண்ணிய, டென்னிஸ் ராக்கெட் வடிவத் துகள்கள் உள்ளன. இவை \(F1\) துகள்கள் அல்லது ஆக்ஸிசோம்கள் எனப்படும். இவை \(ATP\) உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆக்ஸிசோம்கள்
புரதங்கள் மற்றும் லிப்பிட்களின் சிக்கலான கலவை மேட்ரிக்ஸ் எனப்படும். கிரெப்ஸ் சுழற்சியில் ஈடுபடும் நொதிகள், 70S ரைபோசோம்கள், \(tRNA\)கள் மற்றும் \(DNA\)போன்றவையும் மேட்ரிக்ஸ் பகுதியில் காணப்படுகின்றன.
மைட்டோகாண்ட்ரியாவின் பணிகள்:
- மைட்டோகாண்ட்ரியாவானது சுவாசித்தலுக்குத் தேவையான ஒரு மிக முக்கிய நுண்ணுறுப்பாகும்.
- இவை செல்லின் ஆற்றல் மையம் அல்லது சக்தி நிலையம் என அழைக்கப் படுகிறது ஏனெனில் ஏராளமான \(ATP\)கள் இவற்றில் உருவாக்கப் படுகின்றன.
- செல்லிலுள்ள கால்சியம் அயனிகளின் சமநிலையினையும் பாதுகாக்கிறது.
- செல்லின் வளர்சிதை மாற்ற செயலிலும் இவை பங்கு கொள்கின்றன.