PDF chapter test TRY NOW

உயிரினங்களுக்கும் வெளி சூழலுக்கும் இடையே நடைபெறும் வாயு பரிமாற்ற நிகழ்ச்சியே சுவாசித்தல் எனப்படும்.
வளிமண்டலத்திலிருந்து தாவரங்கள் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும். இந்த வாயு பரிமாற்ற முறைக்கு வெளிச்சுவாசம் என்று பெயர். சுவாசித்தல் என்பது ஒரு இயற்பியல் நிகழ்வாகும்.
செல் சுவாசம் என்பது உணவுப் பொருள்களான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள்  ஆக்சிகரணம் அடைந்து, ஆற்றலை வெளிப்படுத்தும் உயிர் வேதியியல் நிகழ்வாகும்.
YCIND20220821_4317_Plant anatomy_05.png
செல் சுவாசம்
 
சுவாசித்தல் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்  பட்டுள்ளன. அவையாவன;
  1. காற்று சுவாசம்
  2. காற்றில்லா சுவாசம்
YCIND20220821_4317_Plant anatomy_01.png
சுவாசித்தலின் வகைகள்