PDF chapter test TRY NOW
முந்தைய பகுதிகளில், நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி மற்றும் நியூட்டனின் மூன்றாம் விதிகளின் நடைமுறை பயன்பாட்டினை பற்றி படித்தோம்.
இந்தப் பகுதியில், நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி பற்றி அறிந்துகொள்வோம்.
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி:
அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வோர் துகளும் மற்ற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது. அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும், அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும். மேலும் நிறைகளின் இணைப்புக் கோட்டின் வழியே இவ்விசை செயல்படும். இவ்விசை எப்போதும் ஈர்ப்பு விசையாகும்.
இவ்விசை, நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல.
m_1 மற்றும் m_2 என்ற நிறையுடைய இரு பொருள்கள் r என்ற தொலைவில் வைக்கப்பட்டுள்ளதாக கருதுவோம்.

இரு நிறைகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை
இவற்றிற்கிடையே உள்ள ஈர்ப்பு விசை F ஆனது, பொது ஈர்ப்பியல் விதிப்படி,
F\ \propto \frac{m_1 \times m_2}{r^2}
F\ =\ \frac{G \times m_1 \times m_2}{r^2}
G என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு (SI அலகுகளில்) 6.674 \times 10^{-11}\ N\ m^2\ kg^{–2}