PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முந்தைய பகுதிகளில், நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி மற்றும் நியூட்டனின் மூன்றாம் விதி பற்றி படித்தோம்.
 
இந்தப் பகுதியில், இந்த விதிகளின் நடைமுறை பயன்பாடுகளில் ஒன்றை பற்றி அறிந்துகொள்வோம்.
 
ராக்கெட் ஏவுதல் நிகழ்வு:
 
நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர்க்கோட்டு உந்தஅழிவின்மை விதி, இவை இரண்டும் ராக்கெட் ஏவுதல் நிகழ்வில் பயன்படுகின்றன.
 
திட அல்லது திரவ எரிபொருள்கள் ராக்கெட்டுகளில் உந்து கலனில் (propellant tank) நிரப்பப்படுகின்றன.
 
அவை எரியூட்டப்பட்டதும், ராக்கெட்டின் வால் பகுதியில் இருந்து வெப்ப வாயுக்கள் அதிக திசைவேகத்தில் வெளியேறுகின்றன.
 
அவை மிக அதிக உந்தத்தை உருவாக்குகின்றன. இந்த உந்தத்தை சமன் செய்ய, எரிகூடத்தில் (combustion chamber) அதற்கு சமமான எதிர் உந்துவிசை உருவாகி, ராக்கெட் மிகுந்த வேகத்துடன் முன்னோக்கி பாய்கிறது.
 
ராக்கெட் உயர பயணிக்கும் போது அதில் உள்ள எரிபொருள் முழுவதும் எரியும்வரை அதன் நிறை படிப்படியாக குறைகிறது. உந்த அழிவின்மை விதியின் படி நிறை குறைய குறைய, அதன் திசைவேகம் படிப்படியாக அதிகரிக்கிறது.
 
ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ராக்கெட்டானது புவியின் ஈர்ப்பு விசையினை தவிர்த்து விட்டு செல்லும் வகையில், அதன் திசைவேக மதிப்பு உச்சத்தை அடைகிறது. இது விடுபடு வேகம் (escape speed) எனப்படுகிறது. (இப்பகுதியினை பற்றி விரிவாக உயர் வகுப்பில் நீங்கள் கற்க உள்ளீர்கள்).
 
சுருக்கம்:
  • ஒரு ராக்கெட்டின் முடுக்கம் மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்தது: வெளியேற்றும் வேகம், வெளியேற்றும் வீதம் மற்றும் ராக்கெட்டின் நிறை.
  • கண்டங்களைத் தாவிச் செல்ல, சுற்றுப்பாதையைப் பெற அல்லது பூமியின் ஈர்ப்பு விசையை தவிர்த்து விட்டு செல்வதற்குத் தேவையான அதிவேகத்தை அடைய, எரிபொருளைத் தவிர ராக்கெட்டின் நிறை முடிந்தவரை சிறியதாக இருக்க வேண்டும்.