PDF chapter test TRY NOW
இயந்திரவியல்:
இயந்திரவியல் என்பது இயற்பியலின் கிளை ஆகும், இது விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி பயிலும் அறிவியல் பாடமாகும்.
இது இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, அவை நிலையியல் மற்றும் இயங்கியல் ஆகும்.
நிலையியல்:
விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியல் நிலையியல் ஆகும்.
இயங்கியல்:
இயங்கியல் என்பது விசையின் செயல்பாட்டால் இயக்கநிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியல் ஆகும்.
இது மேலும் இரு பிரிவுகளாக கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.
1. இயக்கவியல்:
இயக்கத்தை ஏற்படுத்தும் விசையினைக் கருத்தில் கொள்ளாமல் இயக்கத்தினை மட்டுமே விளக்குவது இயக்கவியல் ஆகும்.
2. இயக்கவிசையியல்:
இயக்கவிசையியல் என்பது பொருளின் இயக்கத்தையும், அதற்குக் காரணமான விசை பற்றியும் விளக்குவது ஆகும்.