PDF chapter test TRY NOW

மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களில் மிகவும் ஆர்வம் உடையவராவர். நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அவற்றில் சில பொருட்கள் ஓய்வில் உள்ளன, சில இயக்கத்தில் உள்ளன. ஓய்வும் இயக்கமும் ஒன்றோடொன்று தொடர்புடைய சொற்கள்.
 
முந்தைய வகுப்புகளில், நேர்க்கோட்டு இயக்கம், வட்ட இயக்கம், அலைவு இயக்கம் போன்ற பல்வேறு இயக்க வகைகளைப் பற்றி கற்றுக்கொண்டோம். இதுவரை, இயக்கத்தின் கூறுகளான இடப்பெயர்ச்சி, வேகம் மற்றும் முடுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்தீர்கள். இந்தபாடத்தில், இயக்கத்தின் காரணத்தைப் படிப்போம்.
 
ஒரு பொருள் அதன் ஓய்வு நிலையில் இருந்து நகரத் தொடங்கும் போது, ​​நம் மனதில் எழும் ஒரு கேள்வி,
 
இயக்கத்திற்கு மாற்ற உதவுவது எது? என்பது தான்.
 
இதேபோல், இயக்கத்தில் உள்ள ஒரு பொருள் ஓய்வுநிலைக்கு வருவதற்கு காரணம் என்ன?
 
இயங்கும் பொருளை வேகமாக இயக்குவதற்கும், வேகத்தை குறைக்கவும் எது தேவைப்படுகிறது?
 
நகரும் பொருளின் திசையினை மாற்ற உதவுவது எது? என்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
 
மேலே உள்ள எல்லா கேள்விகளுக்கும் பொதுவான பதில் ‘விசை’என்பதாகும்.
 
இயக்கத்தைப் பற்றிய ஒரு சாதாரண மனிதனின் புரிதலில், விசை என்பது ’தள்ளுதல்’ அல்லது ’இழுத்தல்’ என்ற பதத்திலேயே பொருள் கொள்ளப்படுகிறது.
எனவே, ஓய்வு நிலையில் உள்ள பொருளை இயக்க அல்லது இயக்க நிலையில் உள்ள பொருளை ஓய்வுநிலைக்குக் கொண்டுவர விசை தேவைப்ப டுகிறது. மேலும் இயக்கத்தில் உள்ள பொருளின் திசைவேகத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ, அதன் திசையினை மாற்றவோ விசை என்பது தேவைப்படுகிறது.
push.png
தள்ளுதல்
 
YCIND_220819_4326_Pull rope.png
இழுத்தல்
 
அறிவியல் பூர்வமாக விசை என்பதை சர். ஐசக் நியூட்டனின் மூன்று இயக்க விதிகள் மூலம் விளக்க இயலும்.
 
இவ்விதிகள் மூலம் பொருளின் இயக்கத்தினை தெளிவாகப் புரிந்து கொள்வதுடன், இயக்கத்தில் உள்ள பொருளின் மீது செயல்படும் விசை மதிப்பைக் கொண்டு, அப்பொருள் எவ்வாறு இயங்கப்போகின்றது? என்பதை முன்பே தெரிந்து கொள்ளவும் உதவியாக உள்ளது. நியூட்டனின் இயக்க விதிகளுக்கு முன் விசை மற்றும் இயக்கம் பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இருந்தன.
 
இப்பாடத்தில் அக்கருத்துக்கள் பற்றியும், விசை மற்றும் இயக்கம் பற்றிய நியூட்டனின் மூன்று இயக்க விதிகளையும் அறிந்து கொள்வோம்.