PDF chapter test TRY NOW

முந்தைய பகுதியில், நிலைமம் பற்றி அறிந்து கொண்டோம். இந்த கோட்பாட்டில், நிலைமத்தின் வகைகள் பற்றி அறிந்துகொள்வோம்.
 
நிலைமம்:
வெளிப்புற சமன் செய்யப்படாத விசையால் பாதிக்கப்படாத வரை, அதன் ஓய்வு நிலை அல்லது சீரான இயக்க நிலை ஆகியவற்றில் ஏற்படும் எந்த மாற்றத்தையும் எதிர்க்கும் பொருளின் தன்மை, 'நிலைமம்' என்று அழைக்கப்படுகிறது.
நிலைமத்தின் வகைகள்:
 
அ) ஓய்வில் நிலைமம்:
 
நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு ஓய்வில் நிலைமம் என்று அழைக்கப்படுகிறது.
 
ஆ) இயக்கத்தில் நிலைமம்:
இயக்க நிலையில் உள்ள ஒவ்வொரு பொருளும், தமது இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு இயக்கத்தில் நிலைமம் என்று அழைக்கப்படுகிறது.
 
இ) திசையில் நிலைமம்:
இயக்க நிலையில் உள்ள பொருள், இயங்கும் திசையில் இருந்து மாறாது, திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு திசையில் நிலைமம் என்று அழைக்கப்படுகிறது.
 
நிலைமத்திற்கான எடுத்துக்காட்டுகள்:
  • ஒரு நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் விளையாட்டு வீரர் தாண்டும்முன் முன் சிறிது தூரம் ஓடுகிறார். அவ்வாறு செய்வதன் மூலம், இது அவருக்கு அதிக நீளம் மற்றும் உயரமாக குதிக்க உதவும்.  இது இயக்கத்திற்கான நிலைமம் ஆகும்.
YCIND_220819_4326_kid jumping.png
  • மகிழுந்து ஓட்டும் போது, ​​கூர்மையான வளைபாதையில் செல்லும் போது பயணியர், ​​ஒரு பக்கமாக சாய்வதை காண முடியும். இது திசைக்கான நிலைமம் ஆகும்.
Pierre Jean Durieu Shutterstock.jpg
  • ஒரு மரத்தின் கிளைகளை நீங்கள் உலுக்க்கும்போது, ​​சில இலைகள் கீழே விழும் மற்றும் பழுத்தபின் விழும் பழங்கள் இவை யாவும் ஓய்விற்கான நிலைமத்திற்கு எடுத்துகாட்டாகும்.
shutterstock111408404.jpg