PDF chapter test TRY NOW
முந்தைய பகுதியில், நிலைமம் மற்றும் அதன் வகைகள் பற்றி அறிந்து கொண்டோம். இந்த கோட்பாட்டில், ஒரு செயல்பாட்டின் உதவியுடன், நிலைமத்தின் வகைகள் பற்றி அறிந்துகொள்வோம்.
செயல்பாடு:
- ஒரு கண்ணாடிக் குவளையை எடுத்து அதன் மீது சிறிய அட்டையை வைக்கவும்.
- இப்போது, படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, அட்டையின் மையத்தில் ஒரு நாணயத்தை வைக்கவும்.

- அட்டையினை வேகமாக விரலால் சுண்டவும்.
நீங்கள் என்ன கவனிக்கிறீர்கள்?
அட்டை வேகமாக நகர்ந்து கீழே விழ, நாணயம் கண்ணாடி குவளைக்குள் விழுகிறது.

மேலே விவரிக்கப்பட்ட செயல்பாட்டில், காகித அட்டை நகரும் போது நாணயத்தின் நிலைமம் அதன் ஓய்வு நிலையைத் தக்க வைத்துக் கொள்கிறது. பின்னர், அட்டை ஆரம்ப நிலையில் இருந்து நகர்ந்ததும், புவி ஈர்ப்பு விசையின் காரணமாக நாணயம் குவளையில் விழுகிறது. இது 'ஓய்விற்கான நிலைமம்' காரணமாக நிகழ்கிறது.