PDF chapter test TRY NOW

விசையின் விளைவானது திசைவேகத்தையும், நிறையினையும் சார்ந்து அமைகிறது. பொருளின் திசைவேகமோ, நிறையோ அதிகரிக்கும் போது விசையின் தாக்கம் அதிகமாகும்.
 
ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் தாக்கத்தை நேரகோட்டு உந்தத்தின் மூலம் அளவிடலாம்.
இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் உந்தம் எனப்படும். இதன் திசையானது பொருளின் திசைவேக திசையிலேயே அமையும். இது ஒரு வெக்டார் அளவாகும்.
 
உந்தம் (p) = நிறை (m) × திசைவேகம் (v)p=mv

நேர்கோட்டு உந்தம் '\(p\)' என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. இது ஒரு விசையின் அளவை அளவிட உதவுகிறது.
 
விசையின் எண் மதிப்பானது உந்தத்தால் அளவிடப்படுகிறது.
 
இதன் SI அலகு கிகி மீ வி\(^{-1}\), CGS அலகு கி செ.மீ வி\(^{-1}\) ஆகும்.