PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
எடை இழப்பு:
 
நீங்கள் கேளிக்கை பூங்கா சென்ற போது,
 
அங்கு சுழலும் பெரிய ராட்டினத்தில் விளையாடியதுண்டா?
  
உருண்டோடும் தொடர் வண்டியில் (roller coaster) பயணித்ததுண்டா?
  
இவற்றில் நீங்கள் மேலும் கீழும் பயணித்த போது எவ்வாறு உணர்ந்தீர்கள்?
 
ஒரு குறிப்பிட்ட முடுக்கத்தில் மேலிருந்து கீழே வரும் போது நமது எடை இழப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது அல்லவா?
 
சில சமயங்களில் இந்த எடை இழப்பது போன்ற தோற்றம் மின்தூக்கியில் நாம் நகரும் போதும் ஏற்படலாம்.
 
மேலிருந்து கீழே வரும் பொருளின் முடுக்கம், புவியின் ஈர்ப்பு முடுக்கத்திற்கு சமமாக உள்ள போது (\(a\ =\ g\)) “தடையில்லாமல் தானே விழும் நிலை” (free fall) ஏற்படுகிறது.
 
இந்நிலையில் பொருளின் எடை முற்றிலும் குறைந்து சுழி நிலைக்கு வருகிறது. (\(R\ =\ m \times (g–g)\ =\ 0\))
 
இது “எடையில்லா நிலை” (Weightlessness) என அழைக்கப்படுகிறது.
 
நாம், தோற்ற எடை இழப்பு மற்றும் தோற்ற எடை அதிகரிப்பை, வேகமாக சுழலும்பெரிய ராட்டினத்திலும், ஊஞ்சல் ஆட்டத்திலும், உருண்டோடும் தொடர் வண்டியிலும் உணரலாம்.
 
விண்வெளி வீரரின் எடையிழப்பு:
 
புவியினைச் சுற்றிவரும் விண்கலனில் வேலை செய்யும் விண்வெளிவீரர், அங்கு புவி ஈர்ப்பு விசை இல்லாததாலேயே மிதக்கிறார் என நாம் நினைக்கிறோம்.
 
இது தவறான கூற்றாகும்.
 
உண்மையில் விண்வெளி வீரர் மிதப்பதில்லை. விண்கலம் மிக அதிக சுற்றியக்க திசைவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர் அக்கலத்துடன் இணைந்து சம வேகத்தில் நகர்கிறார். அவரது முடுக்கம், விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால், அவர் ‘தடையின்றி விழும் நிலை’யில் (free fall) உள்ளார்.
 
அப்போது அவரது தோற்ற எடை மதிப்பு சுழியாகும். எனவே அக்கலத்துடன் அவர் எடையற்ற நிலையில் காணப்படுகிறார்.