PDF chapter test TRY NOW
நியூட்டனின் ஈர்ப்பியல் விதியின் பயன்பாடுகள்:
1. பொது ஈர்ப்பியல் விதியானது அண்டத்தில் உள்ள விண்பொருட்களின் பரிமாணங்களை அளவிட பயன்படுகிறது. இவ்விதி புவியின் நிறை, ஆரம், புவி ஈர்ப்பு முடுக்கம் முதலியனவற்றை துல்லியமாக கணக்கிட உதவுகிறது.
2. இவ்விதி புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
3. சில நேரங்களில் விண்மீன்களின் சீரற்ற நகர்வு (Wobble) அருகில் உள்ள கோள்களின் இயக்கத்தை பாதிக்கும். பொது ஈர்ப்பியல் விதி அந்நேரங்களில் அவ்விண்மீன்களின் நிறையினை அளவிட பயன்படுகிறது.
4. தாவரங்களின் வேர் முளைத்தல் மற்றும் வளர்ச்சி புவியின் ஈர்ப்புவிசை சார்ந்து அமைவது ‘புவிதிசை சார்பியக்கம்’ எனப்படும். பொது ஈர்ப்பியல் விதி இந்நிகழ்வை விளக்க பயன்படுகிறது.
5. விண்பொருட்களின் பாதையினை வரையறை செய்வதற்க்கு இவ்விதி பயன்படுகிறது.