PDF chapter test TRY NOW
முந்தைய பகுதியில், நியூட்டனின் முதல் விதி மற்றும் விசையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டோம்.
இந்த கோட்பாட்டில், தொகுபயன் விசைகளைப் பற்றி படிப்போம்.
தொகுபயன் விசை:
பல விசைகள் ஒரே பொருளின் மீது ஒரே நேரத்தில் செயல்படும் போது, பல விசைகளின் ஒருங்கிணைந்த விளைவை ஒரு தனித்த விசையால் குறிப்பிடலாம், இது 'தொகுபயன் விசை' என அழைக்கப்படுகிறது.
இதன் மதிப்பு, செயல்படும் அனைத்து விசைகளின் வெக்டார் கூடுதலுக்குச் (விசைகளின் எண்மதிப்பு மற்றும் திசை ஆகியவற்றின் கூடுதல்) சமமாகும்.
ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அதன் விளைவாக வரும் தொகுபயன் விசையானது பூஜ்ஜியத்திற்குச் (சுழி) சமமாக இருந்தால், பொருள் சமநிலை நிலையில் இருக்கும். இத்தகைய விசைகள் சமன் செய்யப்பட்ட விசைகள் என்று அழைக்கப்படுகின்றன.
தொகுபயன் விசை பூஜ்ஜியத்திற்கு (சுழி) சமமாக இல்லாவிட்டால், அது ஒரு நிலையான பொருளின் இயக்கத்தை மாற்றுகிறது அல்லது நகரும் உடலின் திசையை மாற்றுகிறது. இத்தகைய விசைகள் சமன் செய்யப்படாத
விசைகள் எனப்படும்.
விசைகள் எனப்படும்.
Example:
கிணற்றில் இருந்து நீர் எடுக்க செயல்படும் விசை, நெம்புகோலின் மீது செயல்படும் விசை, தராசுத்தட்டுகளில் செயல்படும் விசை முதலியன சமன் செய்யப்படாத விசைகளுக்கு எடுத்துக்காட்டுகள் அகும்
தொகுபயன் விசைக்கு சமமான, ஆனால் எதிர் திசையில் செயல்படும் ஒரு விசையானது,பொருட்களை சம நிலைக்கு கொண்டுவர உதவுகிறது. இவ்விசையை ‘எதிர்சமனி’ (Equilibrant) என்று அழைக்கப்ப டுகிறது .