PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒட்டுண்ணி வாழ்க்கை முறைக்கு ஏற்ற விதமாய் அட்டையின் உடலில் பல்வேறு மாற்றங்கள் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு:
1. தசைகளால் ஆன தொண்டைப்பகுதி இரத்தத்தை உறிஞ்சிக்கொள்ள பயன்படுகிறது.
2. முன் மற்றும் பின் ஒட்டுறிஞ்சிகள் விருந்தோம்பியின் உடலில் உறுதியாக ஒட்டிக்கொள்ள உதவுகிறது.
3. விருந்தோம்பியின் உடலில் வலி இல்லாத \('Y'\) வடிவ காயத்தை ஏற்படுத்த வாயினுள் இடம்பெற்று இருக்கும் மூன்று தாடைகள் உதவுகின்றன.
4. ஹிருடின் என்னும் அமிலம் அட்டையின் உமிழ்நீர்ச் சுரப்பிகளால் உருவாக்கப்படுகின்றன. இவை, இரத்த உறைதலைத் தடுக்கின்றன. எனவே, அட்டைக்குக் காயத்தில் இருந்து தொடர்ச்சியாக இரத்தம் கிடைக்கின்றது.
5. வளைத்தசைப் புழுக்களில் காணப்படும் பக்கக் கால்கள் (Parapodia) மற்றும் மயிர்க் கால்கள் (setae) அட்டைகளில் இல்லை. இவ்வுறுப்புகள் அட்டைகளுக்கு தேவைப்படுவது இல்லை.
6. தீனிப்பை மாற்றும் குடல்வாலில் அதிகப்படியான இரத்தம் சேமிக்கப்படுகிறது. எனவே, பல மாதங்களுக்கு உணவே தேவைப்படுவது இல்லை.
7. செரிமானம் மிக மெதுவாகவே நடைபெறுவதால் சீரண நீர், நொதிகள் அதிக அளவில் தேவைப்படுவது இல்லை.
அட்டையின் மருத்துவப் பயன்கள்:
அட்டைகளை உபயோகிக்கும் மருத்துவ முறைக்கு ஹிருடோதெரபி (Hirudotherapy) என்று பெயர்.
- அட்டைகள் இரத்த உறைவைத் தடுக்கின்றன.
- இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்துகின்றன.
- சுற்றோட்டக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது.
- அட்டையின் உமிழ்நீரில் இருந்து பெறப்படும் வேதிப்பொருள் உயர் இரத்த அழுத்தம் (Hypertension) குறைக்க உதவும் மருந்துகள் தயாரிக்க பயன்படுகின்றன.
- இரத்தத்தை வழிய விடுதல் என்பது அட்டைகளின் உதவியால் நோயாளியின் உடலில் இருந்து அசுத்தமான, நச்சுப்பொருட்களை வெளியேற்றும் ஒரு நுட்பம் ஆகும்.
ஹிருடோதெரபி
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/de/Med._Leech_suction_action._Hirudotherapy._01.jpg