PDF chapter test TRY NOW

அட்டைகள் கருவுறுதல் முறை:
 
அட்டைகள் இரு பால் உயிரிகளாய் இருப்பினும் பால்முறை இனப்பெருக்கமே மேற்கொள்கின்றன. ஏனெனில் அட்டைகளின் இனப்பெருக்க மண்டலங்கள் இரண்டும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைவது இல்லை.
 
அட்டைகளில் அகக் கருவுருதல்நடைபெறுகிறது. இரு அட்டைகள் வயிற்றுபுறமாக ஒன்றிணையும்போது ஒன்றின் விந்தணுக்கள் மற்றொரு அட்டையின் உடலில் துளைத்துச் சென்று அண்டகங்களை அடைகின்றன. அப்பொழுது கருவுறுதல் நிகழ்கிறது.
 
copulation.png
அட்டைகள் இனப்பெருக்கத்திற்காக ஒன்றிணைதல்
 
கிளைடெல்லம்:
    
கருவுறுதல் நிகழ்வின் போது தடிமனான கூடு போன்ற ஒரு அமைப்பு அட்டையின் உடலில்  \(9\), \(10\) மற்றும் \(11\)ஆவது கண்டங்களைச் சுற்றி உருவாகிறது. இதற்கு கிளைடெல்லம் (Clitellum) என்று பெயர்.
 
பின்னர் கிளைடெல்லம் உடலின் முன்பகுதி மூலம் கழன்று வெளியே வரும். அப்பொழுது அட்டையின் கருவுற்ற அண்டவணுக்கள் கிளைடெல்லத்துக்குள் சென்று சேரும்.
  
கக்கூன்:
    
கிளைடெல்லம் கழன்று வெளியே வந்ததும் அதன் இரு முனைகளும் மூடிக்கொண்டு ஒரு கூடு போல ஆகிவிடும். இந்த முட்டைக்கூட்டிற்கு கக்கூன் என்று பெயர். கக்கூன் உறுதியான கைட்டின் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கரு வளர்ச்சி நேரடியாக நடைபெறும்.
Important!
ஒரு முட்டைக்கூட்டினுள் \(1\) முதல் \(24\) கருக்கள் வளர்கின்றன.
முழு வளர்ச்சிபெற்ற அட்டையைப் போன்ற தோற்றம் கொண்ட இளம் அட்டைகள் கக்கூனில் இருந்து வெளிவரும்.