PDF chapter test TRY NOW

ஹிருடினேரியா கிரானுலோசா எனப்படும் இந்திய கால்நடை அட்டையின் உடற்பகுப்பு மற்றும் கண்டங்களின் அமைப்பு ஆகியவற்றை விரிவாகக் காண்போம்.
 
அட்டையின் உடல் ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
 
YCIND20220907_4431_Divya - Structural organisation of animals 1_02.png
அட்டையின் உடற்பகுப்பு
  
அட்டையின் கண்ட அமைப்பு:
  
அட்டையின் உடல் மொத்தம் \(33\) கண்டங்களாகவும் ஆறு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. கண்டங்கள் உடலின் உட்பரப்பிலும் கண்ட இடைச்சுவரினால் பிரிக்கப்பட்டுள்ளது.
 
YCIND20220901_4408_Structural organisation of animals_06.png
அட்டையின் கண்ட அமைப்பு
  • \(1\)-\(5\) கண்டங்கள் - தலைப்பகுதியில் முன் ஒட்டுறிஞ்சி, வாய் மற்றும் கண்கள் ஆகியவை அமைந்துள்ளன.
  • \(5\)-\(8\) கண்டங்கள் - தொண்டை அமைந்துள்ளது.
  • \(6\)-\(22\) கண்டங்கள் - நெப்ரீடியத் துளைகள் உள்ளன.
  • \(9\)-\(18\) கண்டங்கள் - தீனிப்பை அமைந்துள்ளது.
  • \(10\) ஆவது கண்டம் - ஆண் இனப்பெருக்கத்துளை உள்ளது.
  • \(11\) ஆவது கண்டம் - பெண் இனப்பெருக்கத்துளை உள்ளது.
  • \(10\)-\(22\) கண்டங்கள் - குடல் பகுதி அமைந்துள்ளது.
  • \(19\) ஆவது கண்டம் - வயிற்றுப்பகுதி அமைந்துள்ளது.
  • \(23\)-\(26\) கண்டங்கள் - மலக்குடல் அமைந்துள்ளது.
  • \(26\) ஆவது கண்டம் - மலத்துளை உள்ளது.
  • \(27\)-\(33\) கண்டங்கள் - பின் ஒட்டுறிஞ்சி அமைந்துள்ளது.