PDF chapter test TRY NOW
ஒரு உயிரின வகை தொடர்வதற்கும் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்ளவும் இனப்பெருக்கம் தேவைப்படுகிறது.
Important!
அட்டை இரு பால் உயிரி ஆகும்.
ஒரே உயிரினத்தில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்பு மண்டலங்கள் இடம் பெற்று இருப்பது இரு பால் உயிரிகள் எனப்படும்.
ஆயினும், அட்டை தனக்குத்தானே கருவுறுவது இல்லை. ஏனெனில், இவ்வுயிரிகளில் ஆண் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் வெவ்வேறு நேரங்களில் தனித்தனியாக முதிர்ச்சிப் பெறுகின்றன.
பொதுவாக, ஆண் இனப்பெருக்க உறுப்பான விந்தகம் முதலிலும் பின்னர் பெண் இனப்பெருக்க உறுப்பான அண்டகமும் முதிர்ச்சி அடைகிறது. முதிர்ச்சிப் பெற்ற இனப்பெருக்க உறுப்புகளை உடைய இரு அட்டைகள் ஒன்று சேர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன.
அட்டையின் இனப்பெருக்க மண்டலம்