PDF chapter test TRY NOW

ஆண் இனப்பெருக்க மண்டலத்தின் முக்கிய உறுப்புகள்
விந்தகங்கள்:
ஆண் இனப்பெருக்க உறுப்பான விந்தகங்கள் அட்டையின் உடலில் \(12\)ஆவது கண்டம் தொடங்கி \(22\)ஆவது கண்டம் வரைக்கும் இணைகளாக உள்ளன. ஒவ்வொரு கண்டத்திற்கும் ஓரிணை என்ற வீதத்தில் \(11\) இணை விந்தகங்கள் உள்ளன.
விந்தகப்பை:
விந்தகங்கள் கோளவடிவப் பைகளாக இருக்கின்றன. இவை, விந்தகப் பைகள் என்றழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு விந்தகப்பையில் இருந்தும் ஒரு சிறிய குழாய் தோன்றி அருகில் உள்ள விந்து நாளத்துடன் இணைகிறது. இவை விந்து வெளிச் செலுத்து நாளம் என அழைக்கப்படுகின்றது.
விந்து முதிர்ச்சிப்பை:
இத்தகைய விந்து நாளங்கள் மிக அதிகமான சுருள்களைப் பெறும்பொழுது அவை விந்து முதிர்ச்சிப் பை அல்லது எபிடிடைமிஸ் என மாறுகிறது. விந்து முதிர்ச்சிப்பைகள் விந்து நாளத்தில் இருந்து வெளிப்படும் விந்தணுக்களை சேமிக்க உதவுகிறது. எபிடிடைமிஸ் சிறிய குழாய்களாகத் தொடர்ந்து, வெளியேற்றும் குழாயாக மாறியுள்ளது.
இனப்பெருக்க அறை:
இரு பக்கத்திலும் உள்ள வெளியேற்றும் குழாய்கள் ஒன்றாக இணைந்து இனப்பெருக்க அறையாக மாற்றம் அடைகின்றன.
இனப்பெருக்க அறை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது.
- சுருண்ட புராஸ்டேட் சுரப்பிகள்
- ஆண் குறியைக் கொண்ட பினியல் பை
இனப்பெருக்கத்துளை:
அட்டையின் உடலில் \(10\)ஆவது கண்டத்தில் உள்ள ஆண் இனப்பெருக்கத்துளை மூலம் ஆண் குறி வெளித்திறக்கிறது. இதன் மூலம் விந்தணுக்கள் வெளியேறுகின்றன.

அட்டையின் இனப்பெருக்க மண்டலம்