PDF chapter test TRY NOW

அட்டைகள் நன்னீர் நிலைகளான குளங்கள், ஏரிகள், சதுப்பு நிலங்கள், சிற்றோடைகள், ஈரத்தரை ஆகியவற்றில் வாழ்கின்றன. சில அட்டை வகைகள் கடலில் வாழும் தன்மை உடையன. பெரும்பாலும் அட்டைகள் ஆழமற்ற, வேகம் குறைவான நீரோட்டத்தில் வாழ்கின்றன.
 
ஹிருடினேரியா கிரானுலோசா எனப்படும், இந்தியக் கால்நடை அட்டை இந்தியா, வங்கதேசம், இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் அதிகம் வாழ்கின்றன.
அட்டைகள் புற ஒட்டுண்ணி மற்றும் சாங்கிவோரஸ் வகையில் வாழ்க்கை முறை கொண்டவையாக உள்ளன.
புற ஒட்டுண்ணி வாழ்க்கை:
 
அட்டைகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடலின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டு, தமக்கு ஆதரவு அளிக்கும் விருந்தோம்பியின் (Host) உடலில் இருந்து தனக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொண்டு வாழ்கின்றன. இதுவே புற ஒட்டுண்ணி வாழ்க்கை ஆகும்.
 
leechonhandw1273.jpg
மனித உடலில் இருந்து இரத்தம் உறிஞ்சும் அட்டை
 
சாங்கிவோரஸ் வாழ்க்கை:
  
சாங்கிவோரஸ் என்பதற்கு இரத்த உறிஞ்சிகள் அல்லது குருதி உண்ணிகள் என்று பொருள்.
மீன்கள், தவளைகள், கால்நடைகள், மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் உடலில் ஒட்டிக்கொண்டு இரத்தத்தை அல்லது சாற்றை உறிஞ்சி வாழ்கின்றன.