PDF chapter test TRY NOW
அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.
ஒட்டுண்ணி வாழ்க்கை முறைக்கு ஏற்ற விதமாய் அட்டையின் உடலில் பல்வேறு மாற்றங்கள் பெற்றுள்ளன. தசைகளால் ஆன பகுதி இரத்தத்தை உறிஞ்சிக்கொள்ள பயன்படுகிறது. முன் மற்றும் பின் ஒட்டுறிஞ்சிகள் விருந்தோம்பியின் உடலில் உறுதியாக ஒட்டிக்கொள்ள உதவுகிறது. விருந்தோம்பியின் உடலில் வலி இல்லாத \('Y'\) வடிவ காயத்தை ஏற்படுத்த வாயினுள் இடம்பெற்று இருக்கும் தாடைகள் உதவுகின்றன. என்னும் அமிலம் அட்டையின் உமிழ்நீர்ச் சுரப்பிகளால் உருவாக்கப்படுகின்றன. இவை, இரத்த உறைதலைத் தடுக்கின்றன. எனவே, அட்டைக்குக் காயத்தில் இருந்து தொடர்ச்சியாக இரத்தம் கிடைக்கின்றது. அதிகப்படியான இரத்தம் சேமிக்கப்படுகிறது. எனவே, பல மாதங்களுக்கு உணவே தேவைப்படுவது இல்லை. செரிமானம் மிக நடைபெறுவதால் சீரண நீர், நொதிகள் அதிக அளவில் தேவைப்படுவது இல்லை.