PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ii. உடல்:
  
a. மார்பு - உடலின் முன்பகுதியில் மார்பு அமைந்துள்ளது. மார்புக்கூடு மற்றும் விலா எலும்புகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.
 
b. வயிறு - உடலின் பின்பகுதியில் மென்மையான வயிறு உள்ளது. இப்பகுதி குழிவானதாகவும், எலும்புகள் இன்றியும், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளை பாதுகாக்கும் அறையாகவும் உள்ளது. 
 
c. மார்புக் காம்புகள் (அ) பால் காம்புகள் - பெண் முயலில், மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நான்கு முதல் ஐந்து காம்புகள் அமைந்துள்ள. காம்புகளின் வழியே பால் சுரப்பிகள் உடலுக்கு வெளியே திறக்கின்றன. குட்டிகளை பாலூட்டி வளர்க்க இவை உதவுகின்றன.
 
d. கால்கள் - ஐந்து விரல்களைக் கொண்ட இரு இணைக்கால்கள் உடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. முன்னங்கால்கள் பின்னங்கால்களை விட குட்டையானவை.
  • முன்னங்கால்கள் - குழிபறிக்கவும், தாவும் பொழுது அதிர்வுகளை உள்வாங்கி உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளவும் குட்டையான முன்னங்கால்கள் உதவுகின்றன. ஐந்து விரல்களும், வளைநகங்களும் கொண்டவை.
  • பின்னங்கால்கள் - இவை முன்னங்கால்களை விட நீளமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் உள்ளன. நான்கு விரல்களும், வளை நகங்களும் கொண்டவை.
e. மலத்துளை - வயிற்றின் இறுதியாக, வாலின் அடியில் அமைந்துள்ளது மலத்துளை. சீரண மண்டலம் மலத்துளை மூலம் உடலின் வெளியே திறக்கிறது.
 
f. பிறப்புறுப்பு - சிறுநீர் வெளியேற்றத்திற்கும், இனப்பெருக்க செயல்பாடுகளுக்கும் பிறப்புறுப்பு உதவுகிறது.
  • பெண்குறி - பெண் விலங்குகளில் வயிற்றுப்பகுதியில் சிறிய பிளவு போன்று அமைந்துள்ளது.
  • ஆண்குறி - ஆண் விலங்குகளில் மலத்துளையின் அருகே வயிற்றுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் இருபுறமும் ஓரிணை விதைப்பைகளும் அதன் உள்ளே விந்தகங்களும் உள்ளன.
iii. வால்:
 
குட்டையான, உரோமங்கள் நிறைந்த இப்பகுதி மற்ற முயல்களுக்கு அபாய சைகைகளை வழங்க உதவுகிறது.
 
iv. புறத்தோல்:
  
உடலின் வெளிப்புறம் புறத்தோலால் மூடப்பட்டுள்ளது. உரோமம், வளை நகங்கள், வியர்வைச் சுரப்பிகள், எண்ணெய் சுரப்பிகள், பால் சுரப்பிகள் ஆகியவை புறத்தோலில் காணப்படுகின்றன.
 
a. உரோமம் - மிக மென்மையான, பட்டுப்போன்ற தட்டையான அமைப்பு கொண்ட உரோமங்கள் முயலின் புறத்தோலில் காணப்படுகின்றன. உடலின் வெப்பநிலையை சமன்படுத்தி வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள உரோமங்கள் உதவுகின்றன.
 
b. வளை நகங்கள் - மிகவும் உறுதியான இவை கால்களைப் பாதுகாக்கவும், நிலத்தில்  குழி பறிக்கவும், ஓடும் பொழுதும் பாறைகளில் எறும்போழுதும் தரையை இறுகப்பற்றிக் கொள்ளவும், தற்காப்புக்காக எதிரிகளைத் தாக்கவும் உதவுகிறது.
 
shutterstock_2047441373.jpg
முயலின் வளைநகங்கள்
 
c. வியர்வைச் சுரப்பிகள் - முயலின் உடலில் வியர்வை சுரப்பிகள் உதட்டில் காணப்படுகின்றன. பொதுவாக முயலின் தோல் மிகவும் தடிமனாக இருப்பதால் அங்கே வியர்வை சுரப்பிகள் காணப்படுவது இல்லை.
 
e. எண்ணெய் சுரப்பிகள் - உரோமங்களை மிருதுவாகவும், பளபளப்பாகவும்,வைத்திருக்க உதவுகிறது. ஈரப்பதம் இல்லாமல் இருக்க மெழுகு போல செயல்பட்டு நீர் ஒட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்கிறது.
 
f. பால் சுரப்பிகள் - இவை பாலூட்டிகளில் மட்டுமே காணப்படும் சிறப்புப் பண்பாகும். தோலின் மாறுபாடான இவ்வகைச் சுரப்பிகள்  இருந்து சுரக்கும் பால், முயல் குட்டிகளுக்கு உணவாகிறது.