PDF chapter test TRY NOW
ஒரிக்டோலேகஸ் கியூனிகுலஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட முயல், பாலூட்டி வகையைச் சார்ந்த விலங்குகள் ஆகும். விலங்குலகத்தில் காணப்படும் விலங்குகளில் பாலூட்டிகள் மிகவும் மேம்பாடு அடைந்தவைகளாய் இருக்கின்றன. பாலூட்டுதல் மற்றும் பால் சுரப்பிகள் பெற்றிருத்தல் என்பது இவ்வகை பெண் விலங்குகளின் சிறப்பான பண்பாகும்.
இத்தகையச் சிறப்பு பண்புகளைக் கொண்ட முயல் தனது வாழிடம், பருவநிலை, உண்ணும் உணவுகள் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் உடல் அமைப்பினைப் பெற்றுள்ளன. முயலின் புறத்தோற்றம் மற்றும் அதன் சிறப்பு இயல்புகளைப் பற்றிய விளக்கம் பின்வருமாறு:
முயல் - புறத்தோற்றம்
அளவு:
வடிவம் - முயலின் உடல் நீளமான, சற்றே உருளையான வடிவம் உடையது. ஆண் முயல் மற்றும் பெண் முயல் இரண்டும் ஒரே அளவுடையதாய் இருக்கின்றன.
- நீளம் - \(45\) செ.மீ
- எடை - சுமார் \(2.25\) கிகி வரை
- நிறம் - பொதுவாக வெள்ளை, கருப்பு, சாம்பல், பழுப்பு முதலிய பல நிறங்களில் காணப்படுகிறது.
உடற்பிரிவுகள்:
முயலின் உடலானது தலை, கழுத்து, உடல், வால் எனப் பகுக்கப்படுகிறது.
i. தலை:
முழுமையான வடிவம் பெற்ற முயலின் தலை முட்டை வடிவத்தில் அமைந்துள்ளது. பிளவுபட்ட முகவாய் கொண்டது. வாய், நாசித்துளைகள், கண்கள், காதுகள், உணர் உரோமங்கள் ஆகியவை தலையில் காணப்படுகின்றன.
a. வாய் - கிடைமட்டப் பிளவாக அமைந்துள்ள முயலின் வாய் பகுதி மென்மையான, தசையாலான மேலுதடு மற்றும் கீழுதடு கொண்டது. மேலுதடு நடுப்பகுதியில் பிளவுபட்டு நாசித்துளை வரை செல்கிறது. இந்தப் பிளவின் வழியே முயலின் முன் இரு பற்களும் வெளியே தெரிகின்றது.
b. நாசித்துளைகள் - வாய்க்கு சற்று மேலே சாய்வான துளைகளாக இரண்டு நாசித்துளைகள் உள்ளன. நாசித்துளைகளைச் சுற்றி சற்றே ஈரப்பதம் வாய்ந்த ஒரு தோல்பகுதி காணப்படுகிறது. இதற்கு ரைனேரியம் (Rhinarium) என்று பெயர்.
c. உணர் உரோமங்கள் (அ) மூக்கு முடிகள் (Vibrissae) - மேலுதட்டின் இரு பக்கமும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் உறுதியான, நீண்ட உரோமங்கள் இவை ஆகும். உணர் உரோமங்களின் அடிப்பகுதியில் நரம்பு முடிச்சுகள் உள்ளன. எனவே இவை , உணர்ச்சி மிகுந்தவையாக உள்ளன.
உணர் உரோமங்கள் மற்றும் ரைனேரியம்
d. கண்கள் - தலையின் இருபுறமும் தெளிவான கண்கள் உள்ளது.
முயல் தனது கண்களால் ஏறத்தாழ \(360\) டிகிரி கோணம் வரை பார்க்க இயலும். இதன் மூலம் தன்னைத் தாக்க வரும் எதிரிகள் இருக்கும் திசையை எளிதில் அடையாளம் கண்டு தப்பிக்க இயல்கிறது.
e. காதுகள் - முயலுக்கு பெரிய, அசையக்கூடிய இரு புறச்செவிகள் அல்லது காதுமடல்கள், தலைக்கு மேல் பகுதியில் இருக்கின்றன.
Important!
முயலின் காதுகள் அதிக கேட்கும் திறன் வாய்ந்தவை. சுமார் \(3\) கி.மீ தொலைவு வரை உள்ள ஒலி அலைகளை முயலின் காதுகளால் கேட்க இயலும்.
f. கழுத்து - தலைப்பகுதியின் தொடர்ச்சியாக உள்ள கழுத்துப்பகுதி, தலையை உடலுடன் இணைக்கிறது. முயலின் கழுத்து குறுகியதாகவும்,தலையை எல்லா திசையிலும் திருப்புவதற்கு எளிதாகவும் அமைந்திருக்கிறது. குழி பறிப்பதற்கும், வேகமாக ஓடுவதற்கும் ஏற்றார்போல் குறுகிய கழுத்துப் பகுதி அமைந்துள்ளது.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8b/Rabbit_front_face.jpg/512px-Rabbit_front_face.jpg