PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஆண் முயலின் இனப்பெருக்க மண்டலம், அதன் துணைப் பால் உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் பின்வருமாறு:
ஆண் முயலின் இனப்பெருக்க மண்டலம்
இனப்பெருக்க உறுப்புகள்:
விந்தகம்:
ஆண்முயலின் இனப்பெருக்க உறுப்பாக ஓரிணை விந்தகங்கள் மற்றும் அதைச் சார்ந்த நாளங்கள் உள்ளன. ஆண்முயல் தன் இனப்பெருக்க காலத்தை அடையும் பொழுது, இவை வயிற்றுக்கு வெளியே தொங்குகின்றன.
விதைப்பை:
விந்தகங்கள், தோலால் ஆன விதைப்பையினால் மூடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. விதைப்பை உடலுக்கு வெளியே உரோமங்களால் மூடப்பட்டு ஆண்குறிக்கு இருபுறமும் அமைந்துள்ளன.
விந்து நுண்குழல்கள்:
ஒவ்வொரு விந்தகமும் விந்து நுண்குழல்கள் என்னும் சுருண்ட குழல்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.
எபிடிடைமிஸ்:
இவை விந்தக மேல் சுருண்ட குழல்கள் ஆகும். விந்து நுண்குழல்களில் காணப்படும் விந்தணுக்கள், சேகரிக்கும் நாளங்கள் மூலமாக கடத்தப்பட்டு இங்கே தற்காலிகமாக சேமித்து வைக்கப்படுகின்றன.
விந்து நாளங்கள்:
இந்த நாளங்கள் இரு விந்தகங்களையும் சிறுநீர் வடிகுழாயுடன் இணைக்கின்றன. சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப்பைக்கு சற்று கீழே பின்னோக்கிச் சென்று, ஆண் குறியுடன் இணைகிறது.
துணைச் சுரப்பிகள்
இனப்பெருக்கத்தில் பங்குபெறும் துணைச் சுரப்பிகள் மூன்று ஆகும். அவை புராஸ்டேட் சுரப்பி, கெளப்பர் சுரப்பி, கழிவிடச் சுரப்பி ஆகியனவாகும்.