PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபெண் முயலின் இனப்பெருக்க மண்டலம், அதன் துணைப் பால் உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் பின்வருமாறு:
பெண் முயல் - இனப்பெருக்க மண்டலம்
இனப்பெருக்க உறுப்புகள்
அண்டகங்கள்:
பெண் முயலில் ஓரிணை அண்டகங்களும் அதைச் சார்ந்த சுரப்பிகளும் உள்ளன. இவை சிறுநீரகங்களுக்குப் பின்னால் வயிற்றறையில் உள்ளன. அண்டகங்கள் அண்ட செல்களை உற்பத்தி செய்கின்றன.
அண்ட செல்கள்:
கருமுட்டைகள் என அழைக்கப்படும் இவை, கிராஃபியன் பாலிக்கில் என்னும் சிறப்பு செல்களால் சூழப்பட்டுள்ளன.
ஃபெலோப்பியன் குழல்:
இவை அண்டக்குழாய் எனவும் அழைக்கப்படும்.இதன் வாய்ப்பகுதி அண்டகத்தை ஒட்டி அமைந்துள்ளது. ஒவ்வொரு அண்டகமும் இக்குழாயினுள் அண்ட செல்லை விடுவிக்கிறது. இந்தக் குழாயின் அகன்ற பகுதியாக கருப்பை உள்ளது.
கருப்பை:
முயலின் கருப்பை இரு தனித்தனி பகுதிகளாக அமைந்து நடுவில் ஒன்றாக இணைந்து யோனி அல்லது பிறப்புறுப்புக் கால்வாயாக மாறுகிறது. கருமுட்டை தங்கி வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் கருப்பையினுள் உள்ளன.
வெஸ்டிபியூல்:
சிறுநீர்ப்பையும் பிறப்புறுப்புக் கால்வாயும் இணையும் இடம் வெஸ்டிபியூல் அல்லது சிறுநீரக இனப்பெருக்க கால்வாய் என அழைக்கப்படுகிறது. இக்கால்வாய் பின்னோக்கிச் சென்று, சிறிய பிளவு போன்ற பிறப்புறுப்பு அல்லது வல்வாவாக உடலுக்கு வெளியே திறக்கிறது.
துணைச் சுரப்பிகள்
ஓரிணை கெளப்பரின் சுரப்பி, கழிவிடச் சுரப்பி ஆகியவை பெண் இனப்பெருக்க மண்டலத்தில் அமைந்துள்ள துணைச் சுரப்பிகள் ஆகும்.