PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முயல்கள் தாவர உண்ணிகள் ஆகும். இவை விரும்பி உண்ணும் புற்கள், காய்கறிகள் மற்றும் தாவரங்கள் அதிகமான நார்சத்து நிறைந்தவை. எனவே அவற்றை வெட்டுவதற்கு ஏற்ற வகையில் முயலின் பற்கள் கூர்மையானதாகவும், வளைந்தும் காணப்படுகின்றன.
 
shutterstock639350419.jpg
முயல் பற்கள் - முன்புறத்தோற்றம்  
 
பற்கள் முயலின் உணவு மண்டலத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.பற்கள் உணவுப் பொருட்களை வெட்டுவதற்கும், மெல்லுவதற்கும், அரைப்பதற்கும் உதவுகின்றன.இவை எலும்புகள் போல உறுதியான பண்புடையவை.
முயலின் இரு தாடைகளிலும் பற்கள் கொண்டுள்ளது.மேலும் இரு தொகுதி பற்களைப் பெற்றிருக்கிறது.
இரு முறை தோன்றும் பல்லமைவு:
ஒரு விலங்கினம் தன் வாழ்நாளில் இரு முறை அல்லது இரு தொகுதி பற்களைப் பெறுவது இரு முறை தோன்றும் பல்லமைவு என குறிப்பிடப்படுகிறது.
மனிதன், முயல் உள்ளிட்ட பாலூட்டிகள் சிலவற்றில் இத்தகைய பல்லமைவு காணப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் முதலில் தோன்றும் தொகுதி பற்கள் பால் பற்கள் அல்லது உதிர்பற்கள் என்றழைக்கப்படுகிறது.பின்னர் வளர்பருவத்தில் பால்பற்களுக்கு  பதிலாக உறுதியான முழுமை பெற்ற நிரந்தரப் பற்கள் முளைக்கின்றன. 
 
மாறுபட்ட பல்லமைப்பு:
ஒரு விலங்கினம் பலவகையான பற்களைக் கொண்டிருத்தல் பல்வகைப்பன்மை அல்லது மாறுபட்ட பல்அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.
முயல் இத்தகைய பல் அமைப்பைக் கொண்டுள்ளது.
 
பல் வாய்ப்பாடு:
ஒரு பாலூட்டியில் காணப்படும் பற்களைப் பற்றி சுருக்கமாக எழுதும் முறையே பல் வாய்ப்பாடு ஆகும்.
பாலூட்டிகளில் நான்கு வகையான பற்கள் காணப்படுகின்றன.அவை,
\(I\) - வெட்டும் பற்கள்  (Incisor) - உணவுப்பொருளை கடிக்க அல்லது வெட்ட பயன்படுகிறது.
 
\(C\) - கோரைப் பற்கள் (Canine) - உணவுப்பொருளைக் கிழித்தல் அல்லது உரித்தல் செயல்பாட்டிற்கு உதவுகிறது.சில பாலூட்டிகளில் பல் அமைவுக்கு ஒரு வடிவம் கொடுக்கவும் பேச்சு ஒலியை சீர்செய்யவும் இடம்பெற்றிருக்கிறது.
 
\(PM\) - முன் கடைவாய்ப் பற்கள் (Premolar) - உணவை மெல்லுவதற்கு உதவுகிறது
 
\( M\) - பின்கடைவாய்ப் பற்கள் (Molar) - உணவை அரைத்து கூழாக்க உதவுகிறது.
ஒரு விலங்கின் மேல் மற்றும் கீழ் தாடையின் ஒரு பாதியில் (அ) ஒரு பக்கத்தில் மட்டும் காணப்படும், வெவ்வேறு வகையான பற்களின் எண்ணிக்கையைக் குறித்தல் பல் வாய்ப்பாடு ஆகும்.
 
பல் வாய்ப்பாடு = மேல் தாடையின் ஒரு பாதியில் காணப்படும் பற்களின் எண்ணிக்கை கீழ் தாடையின் ஒரு பாதியில் காணப்படும பற்களின் எண்ணிக்கை
                                 = வெட்டும் பற்கள் வெட்டும் பற்கள் ,கோரைப்பற்கள்கோரைப்பற்கள் ,முன் கடைவாய்ப் பற்கள் முன் கடைவாய்ப் பற்கள்  , பின் கடைவாய்ப் பற்கள் பின் கடைவாய்ப் பற்கள் 
                                 = II, CC, PMPM, MM
 
YCIND20220901_4408_Structural organisation of animals_09.png
முயலின் பல்லமைப்பு
 
இம்முறையின் படி முயலின் பல் வாய்ப்பாடு பின்வருமாறு எழுதப்படும்:
  
பல் வாய்ப்பாடு(முயல்) = 20331023
 
அதாவது,
 
முயலின் வெட்டும் பற்கள் (மேல் தாடை கீழ் தாடை ) = I21
 
முயலுக்குக் கோரைப்பல் கிடையாது. எனவே, C00
 
முயலின் முன் கடைவாய்ப்பற்கள்(மேல் தாடை கீழ் தாடை ) = PM33
 
முயலின் பின் கடைவாய்ப்பற்கள் (மேல் தாடை கீழ் தாடை ) = M33
 
டயாஸ்டீமா:
முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா அல்லது பல் இடைவெளி என்றழைக்கப்படுகிறது.
உணவை மேல்லும்போதும் அரைக்கும் போதும் அதைக் கையாள இந்த இடைவெளி தேவைப்படுகிறது.