PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நரம்பு மண்டலம் விலங்கின் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் அமைக்கப்பட்ட விந்தைமிகு இயக்க தொகுதி ஆகும். முயலின் நரம்பு மண்டலம் மற்றும் அதைச் சார்ந்த உறுப்புகள் பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.
 
முயலின் நரம்பு மண்டலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
YCIND20220907_4452_Divya - Structural organisation of animals 2_10.png
முயலின்  நரம்பு மண்டலம் - தொகுப்பு வரைபடம்  
 
1. மைய நரம்பு மண்டலம் (CNS - Central Nervous System)
மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது மைய நரம்பு மண்டலம் ஆகும்.
மூளை
 
YCIND20220901_4408_Structural organisation of animals_11.png
முயலின் மூளை
 
இவ்வுறுப்பு மண்டையோட்டினுள் அமைந்துள்ளது.
மூளை மெனின்ஜஸ் அல்லது மூளை உறைகள் எனப்படும் மூன்று வகையான சவ்வினால் சூழப்பட்டுள்ளது. அவை,
  • டியூராமேட்டர் - வெளிச்சவ்வு
  • பயாமேட்டேர் - உட்சவ்வு
  • அரக்னாய்டு உறை - இடைச்சவ்வு ஆகும்.
மூளை முன்மூளை, நடுமூளை, பின்மூளை எனப் பிரிக்கப்படுகிறது.
 
YCIND20220907_4452_Divya - Structural organisation of animals 2_11.png
முயலின் மூளை - தொகுப்பு வரைபடம்
 
முன்மூளையில் காணப்படும் பகுதிகள் ஓரிணை நுகர்ச்சிக் கதுப்புகள், பெருமூளை அரைக் கோளங்கள் மற்றும் டையன்செஃபலான் ஆகியனவாகும்.பெருமூளை அரைக்கோளங்கள் இரண்டு பகுப்புகளாக உள்ளன.இவற்றை கார்பஸ் கலோசம் என்னும் குறுக்கு நரம்புப் பட்டை இணைக்கிறது.
 
நடுமூளையில் பார்வைக்கோளங்கள் உள்ளன
 
பின்மூளையில்சிறுமூளை, பான்ஸ் வெரோலி மற்றும் முகுளம் ஆகியவை உள்ளன.
 
2. புற அமைவு நரம்பு மண்டலம்(PNS - Peripheral Nervous System)
 
இவை மூளை மற்றும் தண்டுவடத்தில் இருந்து புறப்படும் நரம்புகளை உள்ளடக்கியுள்ளன.
முயலின் புற அமைவு நரம்பு மண்டலத்தில் \(12\) இணை மூளை நரம்புகளும், \(37\) இணை தண்டுவட நரம்புகளும் உள்ளன.
3. தானியங்கு நரம்பு மண்டலம்(ANS - Autonomic Nervous System)
 
இவை பரிவு மற்றும் இணைப் பரிவு நரம்பு மண்டலங்களைக் கொண்டுள்ளது.