PDF chapter test TRY NOW
நம் அன்றாட வாழ்வில் தினம்தோறும் வெப்பத்தை நாம் பல்வேறு வழிகளில் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். எந்தெந்த மூலங்களில் இருந்து வெப்பம் கிடைக்கிறது என்று நாம் இப்போது காண்போம்.
சூரியன்
நமது மிகப்பெரிய வெப்ப மூலம் சூரியன் ஆகும். சூரியன் ஒளியைத் தருகிறது என நமக்கு தெரியும். அதுவே வெப்பத்தையும் தருகிறது.
வெப்பத்தின் ஆதாரம் -சூரியன்
நீங்கள் சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்று விட்டு, உங்களது தலையைத் தொட்டுப் பாருங்கள். அப்பொழுது உங்களது தலை சூடாக இருக்கும். ஆம், சூரியன் ஒளி மற்றும் வெப்பம் என இரண்டையும் தருகிறது. வெப்பத்தின் காரணமாகத் தான் நம்மால் கோடை வெயிலில் அதிக நேரம் நம்மால் நிற்க முடிவது இல்லை.
மனிதன் சூரிய ஒளியின் கீழ் நிற்கிறான்
எரித்தல்
தினந்தோறும் நம் வீடுகளில் வெப்பம் வெளியிடும் பொருள்களை எரிப்பதன் மூலமாக பெறப்படும் வெப்பத்தை நாம் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். ஆம், எரிப்பதனால் கூட வெப்பத்தை நாம் பெற முடியும்.
மரக்கட்டை, மண்ணெண்ணெய், நிலக்கரி, கரி, பெட்ரோல், எரிவாயு போன்றவற்றை எரிப்பதினால் ஆற்றலை பெறலாம்.
எரிக்கும் பொழுது
உராய்தல்:
கைகள் உராயும் பொழுது,
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், நம் இரு கைகளும் உராயும்போது அதிலிருந்து வெப்பம் உருவாகிறது. இருபரப்புகள் ஒன்றோடொன்று உராயும்போது வெப்பம் வெளிப்படுகிறது. இது போலவே, ஆதிகால மனிதன் இரு கற்களை ஒன்றோடொன்று உரசச்செய்து நெருப்பை உருவாக்கினான்.
மின்சாரம்:
ஒரு கடத்தியின் வழியாக மின்னோட்டம் பாயும் பொழுது அங்கு வெப்பமானது உருவாகிறது.
பின்வரும் மின் வெப்ப சாதனங்கள் இத்தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகின்றன.
மின்வெப்பகலங்கள்
மின்சார இஸ்திரிப் பெட்டி
மின்சார நீர் சூடேற்றி