PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நமது அன்றாட வாழ்வில் பல்வேறு வகையான பொருட்களைப் பார்க்கிறோம். அவை அனைத்தும் ஒரே நிலையில் தான் இருக்கின்றதா? 
 
அவற்றில் சில பொருட்கள் சூடானவை, சிலபொருட்கள்  குளிர்ச்சியானவை. எந்தெந்தப் பொருட்கள் மற்றவற்றை விட அதிக சூடாக இருக்கின்றன என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?
 
உதாரணமாக:
 
1. நாம் அருந்தும் அளவிற்கு சூப் சூடாக உள்ளதா?
 
2. பாலானது தயிராக உருவாக வேண்டிய அளவுக்குக் குளிர்ச்சியடைந்துள்ளதா?
 
என்பதனை நமது கைகளால் தொட்டுப் பார்த்து உணர்கிறோம். ஆனால் சரியான வெப்ப நிலையை உணர நமது தொடுஉணர்வை நம்ப முடியுமா?
செய்முறை:
  • மூன்று கிண்ணங்கள் அல்லது பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். 
shutterstock1221970246.jpg
  • முதலாவதில் குளிர்ந்த நீரை எடுத்து கொள்ள வேண்டும். (குளிர்ச்சிக்காக சில பனிக் கட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம்).
  • இரண்டாவதில் சூடுபடுத்தப்படாத (அறை வெப்பநிலையில் உள்ள) நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
shutterstock429847693.jpg
  • மூன்றாவதில் சூடான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும் .(கையை சுட்டு விடும் அளவுக்கு சூடு வேண்டாம்).
  • அவற்றை வரிசையாக ஒரு மேசையின் மீது வைக்கவும்.
Asset 3.png
  • வலக்கையை குளிர்ந்த நீரிலும் இடக்கையை சூடான நீரிலும் வைக்கவும்.
  • சில நிமிடங்களுக்கு இவ்வாறு வைத்திருக்கவும்.
  • பிறகு இரு கைகளையும் எடுத்து உதறிவிட்டு நடுவில் உள்ள பாத்திரத்தில் (அறை வெப்பநிலையில் உள்ள நீர்) கைகளை வைக்கவும்.
1.png
 
நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
 
கிண்ணத்தில் உள்ள நீரில், வலதுக்கையை வைக்கும் பொழுது சூடாகவும், இடதுக்கையை வைக்கும் பொழுது குளிர்ச்சியாகவும் தோன்றுகிறாத?
 
அதாவது, கிண்ணத்தில் உள்ள அதே நீரானது, நம்  வலதுக்கையை வைக்கும் பொழுது  சூடாக இருப்பதாகவும், இடதுக்கையை வைக்கும் பொழுது குளிர்ச்சியாக இருப்பதாகவும் நமக்கு தோன்றுகிறது.
 
இவ்வாறு நமக்கு தோன்ற காரணம் என்ன?
 
1. இடதுகையை சூடான நீரில் வைக்கும்பொழுது கையானது சூடாகிறது. அதாவது கையிலுள்ள மூலக்கூறுகளை வேகமாக அதிர்வடையச் செய்கிறது.
 
2. இந்த சூடான  கையை சாதாரண அறை வெப்பநிலையில் உள்ள நீரில் வைக்கும் பொழுது கையில் இருந்து வெப்ப ஆற்றல் நீருக்கு கடத்தப்படுகிறது. அதாவது, கையில் உள்ள மூலக்கூறுகள் நீர் மூலக்கூறுகளுக்கு தனது வெப்ப நிலையை, தனது அதிர்வை கடத்துவதன் மூலம் தனது வெப்பநிலையை குறைத்துக்  கொள்கின்றன.
 
3. இதன் காரணமாகவே நமக்கு நீர் குளிர்ச்சியாக இருப்பதாக உணர்கிறோம்.
 
4. இதைப்போலவே, ஏற்கனவே குளிர்ந்த நீரில் வைக்கப்பட்டிருந்த வலதுகை இப்பொழுது நீரிலிருந்து வெப்ப ஆற்றலை எடுத்துக் கொள்வதால், அது சூடான உணர்வைப் பெறுகிறது.
 
5. ஒரே வெப்பநிலையில் உள்ள நீரானது நமது இரு கைகளில் வெப்பநிலையைப் பொறுத்து வேறுபட்ட உணர்வுகளைத் தருகிறது.
 
எனவே, வெப்பநிலையைத் தொடு உணர்வால் அளவிடுவது சரியானதல்ல. பிறகு வெப்பநிலையை எப்படி கணக்கீடுவது?
  
வெப்பநிலையை நாம் துல்லியமாக கணக்கிட வெப்பநிலைமானி உதவுகிறது. இதைப் பற்றி பின்வரும் பாடங்களில், நாம் அறிந்து கொள்வோம்.