PDF chapter test TRY NOW
காந்தப் பிரிப்பு முறை:
ஒரு கலவையில் காந்தத்தின் உதவியுடன், காந்தத் தன்மையுள்ள பொருட்களை, காந்தத் தன்மை அற்ற பொருட்களிடம் இருந்து பிரித்தெடுக்கும் முறையின் பெயர் காந்தப் பிரிப்பு முறை. காந்தம் ஈர்க்கும் பொருளை காந்தத் தன்மையுடைய பொருள் என்பர்.
Example:
இரும்பு ஒரு காந்த தன்மையுடைய பொருள்.
காந்தப் பிரிப்பு முறை
சிலசமயங்களில் ஒரு கலவையைப் பிரிப்பதற்கு, ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்துவோம். உதாரணத்திற்கு, மணல் மற்றும் உப்பு கலந்த நீரின் கலவையைப் பிரிப்பதற்கு கீழே குறிப்பிட்டுள்ள முறைகளைப் பயன்படுத்துவோம்:
- படியவைத்தல்
- தெளிய வைத்து இறுத்தல்
- வடிகட்டுதல்
- ஆவியாக்குதல்
- குளிரவைத்தல்
ஆவியாக்குதல்:
நீரை, நீராவியாக மாற்றும் செயல்முறையின் பெயர்.
ஆவியாக்குதல்
குளிரவைத்தல்:
நீராவியை, நீராக மாற்றும் செயல்முறைக்குப் பெயர்.
குளிரவைத்தல்