PDF chapter test TRY NOW

இதனைப் பிரித்தெடுக்கும் முறைகள்,
  1. கைகளால் தெரிந்தெடுத்தல்
  2. சலித்தல்
  3. தூற்றல்
  4. கதிரடித்தல்
  5. காந்த பிரிப்பு முறை
கைகளால்தெரிந்தெடுத்தல்:
கலவையில் உள்ள மாசுப் பொருட்கள் நம் கண்களுக்குத் தெரியுமாயின், அதனைக் கைகளைக் கொண்டு தெரிந்து நீக்கும் செயலின் பெயர் கைகளால் தெரிந்தெடுதல்.
Example:
அரிசியில் இருந்து, கல்லை நீக்குதல்
Manju Mandavya Shutterstock.jpg
கைகளால்தெரிந்தெடுத்தல்
 
சலித்தல்:
சல்லடையின் உதவியுடன்,வெவ்வேறு அளவில் உள்ள திடப்பொருட்களைப் பிரிக்கும் முறைக்கு பெயர் சலித்தல்.
Example:
மணல் போன்ற சிறிய தூகளிடம் இருந்து, சலவைக் கல்லை, சற்று பெரிய திடப்பொருளைப் பிரித்தெடுப்பது.
pexels-klaus-nielsen-6287225.jpg
சலித்தல்
 
தூற்றல்:
எடை அதிகமாக உள்ளப் பொருட்களையும் ,எடை குறைவாக உள்ள பொருட்களையும் காற்றின் உதவியுடன் பிரிக்கும் செயலுக்குப் பெயர் தூற்றல்.
Example:
எடை குறைவான உமியை,  எடை அதிகமான கோதுமை மற்றும் நெல்மணியில் இருந்து பிரித்தெடுப்பது.
Arthur Teng Shutterstock.jpg
தூற்றல்
 
கதிரடித்தல்:
தானியங்களை அதன் தாவரத் தண்டில் இருந்து பிரிப்பதற்கு, கடினமானத் தரையில் அடிப்பார்கள், இப்படி அடித்து தானியங்களைப் பிரிக்கும் முறைக்கு கதிரடித்தல் என்று பெயர்.
shutterstock_1317943556.jpg
கதிரடித்தல்