PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கலவையில் உள்ளப் பகுதிப்பொருட்களின் பண்புகளைப் பொருத்தே,  பிரித்தெடுக்கும் முறையானது  தேர்வு செய்யப்படுகிறது.
 
பொருட்களின் அளவு, வடிவம், மற்றும் இயற்பியல் தன்மை (திட, திரவ, வாயு) ஆகியவற்றைப் பொருத்து பிரித்தெடுக்கும் முறை மாறுபடும்.
 
பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:
  1. திட - திரவக் கலவைகளைப் பிரித்தெடுத்தல்.  
  2. திடக்கலவைகளைப் பிரித்தெடுத்தல்.
திட - திரவக் கலவைகளைப் பிரித்தெடுத்தல்:
  
இந்தக் கலவைகளைப் பிரிக்கும் முறைகள்,
  • வடிகட்டுதல்.
  • படியவைத்தல்.
  • தெளிய வைத்து இறுத்தல்.
  • கடைதல்.
வடிகட்டுதல்:
நீர்மக்கலவையில் இருந்து கரையாத திடப்பொருட்களை, தனியாகப் பிரித்தெடுக்கும் முறையின் பெயர் வடிகட்டுதல்.
TCIND_220518_3760_7.png
 
இந்த முறையின் போது, வடிக்கட்டியின் வழியாக வந்த திரவத்தை  வடிநீர் என்றும், வடிக்கட்டியில் தங்கிய கரையாத திடப்பொருட்களை  வண்டல் என்றும் நாம் கூறுவோம்.
Example:
தேநீரில் இருந்து, தேயிலையைப் பிரித்தெடுத்தல்.
shutterstock_1587149026.jpg
வடிகட்டுதல்
 
படிய வைத்தல்:
ஒரு திட - திரவக் கலவையில், திரவத்தில் உள்ள கரையாத திடப்பொருட்களை, பாத்திரத்தின் அடியில் தங்க வைக்கும் முறைதான் படியவைத்தல்.
ஒரு கண்ணாடி குவலையில், கலங்கிய நீரை முதலில் ஊற்றும் போது, தண்ணீர் முழுவதும் மாசுக்களால் கலந்து இருப்பதைக் காண முடியம். அதுவே சிறிது நேரம் அதனை எதுவும் செய்யாமல் விட்டால், கனமுள்ள கரையாத திடப்பொருட்கள் தண்ணீரின் அடியில் சென்றுத் தங்கும். இப்படி அடியில் தங்கிய தூசுக்களை வண்டல் என்பர். அதுவே, வண்டலுக்கு மேல் உள்ள தண்ணீர் இப்பொழுது தெளிவாக இருக்கும். இப்படி படியவைத்தல் முறையில் கிடைக்கும் தண்ணீரை தெளிந்த நீர் என்பர்.
Example:
கலங்கிய நீரில் இருந்து, கரையாத மாசுக்களை நீக்குதல்.
TCIND_220518_3760_5.png
  
தெளிய வைத்து இறுத்தல்:
படியவைத்தல் முறையில் கிடைத்த தெளிந்த நீரை, கீழே உள்ள வண்டல்களை அசைக்காமல் இன்னொரு பாத்திரத்திற்கு பொறுமையாக மாற்றும் செயலின் பெயர் தெளிய வைத்து இறுத்தல்.
Example:
வண்டலில் இருந்து, தெளிந்த நீரை நீக்குதல்.
TCIND_220518_3760_6.png
  
கடைதல்:
ஒரு கலவையில் உள்ள, மிகச் சிறிய அளவிலான கரையாத திடப்பொருட்களை,  திரவத்திலிருந்து பிரிக்கும் முறையின் பெயர் கடைதல்.
Example:
தயிரிலிருந்து  வெண்ணெய் எடுத்தல்.
shutterstock214192270w300.jpg
கடைதல்