
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo
செயற்கை நுண்ணறிவி
\(AI\) என்பது செயற்கை நுண்ணறிவைக் குறிக்கிறது. செயற்கை நுண்ணறிவு மனித மூளையைப் போலவே செயல்படும் கணினி செயல்பாடுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆராய்ச்சியில் இது இன்னும் அடையப்படவில்லை என்றாலும், சில கணினிகள் கூட்டத்தில் உள்ள முகங்களை அடையாளம் காண நிரல்படுத்தப்படலாம்.
ரோபாட்டுகள் சிந்திக்க முடியுமா?

வெல்டிங் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள ரோபோ
ரோபாட்டுகள் சிந்திக்க முடியும். அவைகள் சதுரங்கம் போன்ற சிக்கலான விளையாட்டுகளை மனிதர்களை விட சிறப்பாக விளையாடுகின்றன.
ஒரு ரோபாட் தன்னால் சிந்திப்பதை உணரமுடியுமா? மனிதர்கள் தங்கள் உணர்வுநிலைகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், ஆனால் அக உணர்வு எவ்வாறு இயங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது.. அதே வழியில், ரோபாட்டுகள் எப்போதும் அக உணர்வுடன் இருக்குமா என்பது நமக்கு தெரியாது.
நானோரோபாட்டுகள்:
நானோரோபாட்டுகள், சிறிய அளவுகளில் பொருத்தி ஒரு பணியைச் செய்ய நுண்ணிய அளவுகளுக்குக் குறைக்கப்பட்ட ரோபாட்டுகள் ஆகும்.
எதிர்காலத்தில் நம்மால் இரத்த ஓட்டத்தில் நானோபோட்டுகளைச் செலுத்துவதன் மூலம், நடைமுறையில் சாத்தியமில்லாத நுண்ணிய, கடினமான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இயலும்.

புற்றுநோய் செல்களை குறிவைத்து அழிக்க - நானோரோபாட்டுகள்
புற்றுநோய் செல்களை குறிவைத்து, அருகிலுள்ள ஆரோக்கியமான செல்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அவற்றை அழிக்க முடியுமானால், நானோரோபாட்டுகள் என்ன செய்ய முடியும் கற்பனை செய்ய முடிகிறதா?
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:FANUC_6-axis_welding_robots.jpg