PDF chapter test TRY NOW
வேகம் மற்றும் அதன் பல்வேறு வகைகள் பற்றி அறிந்து கொள்வோம். ஒரு பொருள் எவ்வளவு விரைவாக நகரும் என்பதை வேகம் நமக்குச் சொல்கிறது. வேகம் என்பது அளவிடல் அளவு, இது ஒரு பொருள் எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது என்பதன் அளவை (எண் மதிப்பு) மட்டுமே கூறுகிறது.
வேகம் என்பது ஓரலகு காலத்தில் ஒரு பொருள் கடந்த தூரமாகும்.
வேகத்தின் \(SI\)அலகு ஆகும்.
மேலும், வேகம் மற்றும் நேரத்தைப் பயன்படுத்தி தூரத்தைக் கணக்கிட விரும்பினால், பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.
தூரம் மற்றும் நேரத்தைப் பொறுத்து வேகத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.அவை
1. சீரான வேகம்
2. சீரற்ற வேகம்
1. சீரான வேகம்:
இயக்கத்தில் உள்ள ஒரு பொருள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சமமான தூரத்தைக் கடந்து சென்றால், அந்தப் பொருள் சீரான வேகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2. சீரற்ற வேகம்:
ஒரு பொருள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சமமற்ற தூரத்தைக் கடந்து சென்றால், அந்தப் பொருள் சீரற்ற வேகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சராசரி வேகம்:
ஒரு பொருளின் சராசரி வேகத்தை அந்தப் பொருள் பயணிக்கும் மொத்த தூரத்தையும், அந்த தூரத்தைப் பயணிக்க அவை எடுத்துக் கொண்ட மொத்த நேரத்தையும் வகுத்து கணக்கிடலாம். அதாவது,
சராசரி வேகத்திற்கான அலகு அல்லது ஆகும்.
மீட்டர் என்பது நீளத்தின் \(SI\) அலகு ஆகும். வினாடி என்பது நேரத்தின் \(SI\) அலகு ஆகும்
சராசரி வேகத்திற்கான \(SI\) அலகு ஆகும்.
Important!
தெரிந்து கொள்!
\(112\) வேகத்தில் ஓடும் திறன் கொண்ட சிறுத்தை நிலத்தில் உள்ள மிக வேகமான விலங்கு.
வேகமாக ஓடக்கூடிய விலங்கு
Reference:
https://pixabay.com/photos/cheetah-africa-namibia-cat-run-2859581/