PDF chapter test TRY NOW

பொருட்கள்  அவை நகரும் விதத்தின் அடிப்படையில், இரண்டு வகையான இயக்கங்கள்  உள்ளன.
  
1. கால ஒழுங்கு இயக்கம்:
 
சம கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கம் கால ஒழுங்கு இயக்கம் எனப்படும்.
 
clock13006461280.png
கடிகாரத்தின் சுழற்சி
  
உதாரணமாக:
 
பூமியைச் சுற்றி சந்திரனின் சுழற்சி மற்றும் அதன் அச்சில் பூமியின் சுழற்சி.
 
2. கால ஒழுங்கற்ற இயக்கம்:
 
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக நடைபெறாத இயக்கம், கால ஒழுங்கற்ற இயக்கம் எனப்படும்.
 
tree53735631920.png
மரத்தின் கிளைகளை அசைத்தல்
 
உதாரணமாக:
 
ஒரு மரத்தின் கிளைகளை அசைத்தல்.
ஈர்ப்பு மற்றும் உராய்வின் கீழ் ஒரு பந்தின் இயக்கம்.
விக்கெட்டுகளுக்கு இடையே ஒரு மட்டை வீச்சாளர் ஓட்டம்.
Important!
அறிந்து கொள்!
 
அதிக வேகத்தில் இயங்கும் அலைவுகளின் இயக்கம்:
 
நெகிழிப் பட்டையின் இரு முனைகளையும் நன்றாக இழுத்துப் பிடித்துக்கொள்ளுமாறு உங்கள் நண்பனை சொல்லவும். இப்போது அதன் மையப்பகுதியை இழுத்துவிடுங்கள். அதன் அலைவானது அதிக வேகத்தில் நடைபெறுவதை நீங்கள் பார்க்கிறீர்களா?
அலைவானது அதிவேகமாக நடைபெறும் போது நாம் அந்த இயக்கத்தினை அதிர்வுறுதல் என அழைக்கிறோம்.