PDF chapter test TRY NOW

வன்பொருள் (Hardwares)
 
கணினி வன்பொருள் என்பது கணினி அமைப்பை உருவாக்கும் இயற்பியல் கூறுகளின் தொகுப்பாகும். இது,
  • கணினித்திரை
  • சுட்டி
  • விசைப்பலகை
  • கணினி தரவு சேமிப்பு (ஹார்ட் டிரைவ்HDD)
  • கணினி அமைப்புகள் (கிராஃபிக் கார்டுகள், ஒலி அட்டைகள், நினைவகம், மதர்போர்டு மற்றும் சில்லுகள்)
போன்ற கணினியின் உடல் பாகங்கள் அல்லது கூறுகளைக் குறிக்கிறது. மேலும், இவை அனைத்தும் தொடக்கூடிய பாகங்கள் ஆகும்.
 
உள்ளீட்டு கருவிகள் (Input devices)

கணினிகளில், உள்ளீட்டு கருவி என்பது, தகவல் செயலாக்க அமைப்புக்கு தரவு மற்றும் கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை வழங்க பயன்படும் ஒரு கருவியாகும்.
Example:
விசைப்பலகை, சுட்டி, வருடி, புகைப்பட கருவி, இயக்குபிடி, இணையப்படக்கருவி மற்றும் ஒலிவாங்கி
வெளியீட்டு கருவிகள் (Output devices)

வெளியீட்டு கருவி என்பது கணினியின் ஒரு பகுதியாகும், இது தகவல்களை படிக்கக்கூடிய வடிவமாக மாற்றுகிறது. இந்த தகவல்கள் உரை, வரைகலை, ஒலி அமைவு மற்றும் காணொளி வடிவமாக இருக்கலாம்.
Example:
கணினித்திரை, அச்சுப்பொறி, வரைவி, ஒலிப்பெருக்கி, ஒளிவீழ்த்தி மற்றும் கேட்பொறி
தரவு சேமிப்பு கருவிகள் (Storage devices)
தரவு சேமிப்பு என்பது கணினிகளின் இன்றியமையாத மற்றும் முக்கிய செயல்பாடு ஆகும். தரவுகள் மற்றும் தகவல்களை சேமித்து வைக்கவும், மேலும் தேவைப்படும் பொழுது பிரித்தெடுக்கவும் பயன்படும் சேமிப்பு சாதனம் பயன்படுத்தப்படுகிறது.
Example:
வன்வட்டு, ஒலிவட்டு (சிடிகள், டிவிடிகள் மற்றும் ப்ளூ-ரே டிஸ்க் ஆகியவை அடங்கும்), ஃபிளாஷ் கார்டு மற்றும் நினைவக அட்டை
மென்பொருள் (Software)
மென்பொருள் என்பது உள்ளீட்டுத் தகவலைச் செயலாக்குவதற்கும் , செயல்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் குறியீட்டுப் பயன்பாடாகும்.
மென்பொருள் உள்ளீட்டுத் தகவலை குறியீட்டு மொழியாக அல்லது நிரலாக்க மொழியாக (programming language) மாற்றி, பயனரால் குறிப்பிடப்பட்ட பணியைச் செய்ய அவற்றைச் செயல்படுத்துகிறது.
 
மென்பொருள் என்பது பொதுவாக ஒரு கணினி அமைப்பில் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடிய ஆவணங்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் செயல்முறைகளின் தொகுப்பாகும்.
 
Important!
மென்பொருள் என்பது கணினியின் உடல் உறுப்பு அல்ல, எனவே அவற்றை நாம் தொடவோ உணரவோ முடியாது, ஆனால் மென்பொருளின் செயல்பாடுகளை வெளியீடு மூலம் பார்க்கலாம்.
மென்பொருளின் செயல்முறையின் அடிப்படையில் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
  • இயக்க மென்பொருள்
  • பயன்பாட்டு மென்பொருள்
1. இயக்க மென்பொருள்

இயக்க மென்பொருள்(OperatingSystem- OS) என்றும் அழைக்கப்படுகிறது.
கணினி இயங்குதவற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளை கொண்ட மென்பொருள், இயக்க மென்பொருள் என்கிறோம்.
2. பயன்பாட்டு மென்பொருள்
பயன்பாட்டு மென்பொருள் என்பது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிரல்களின் தொகுப்பாகும்.
மேலும், இதனை கணினியில் தேவைப்படும் போதோ அல்லது அதற்கு முன்போ நிறுவலாம்.
கணினியின் செயல்பாடுகள்
அடிப்படையில், ஒரு கணினி \(5\) அடிப்படை செயல்பாடுகளை செய்கிறது. இவை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
  • தரவு மற்றும் வழிமுறைகளை உள்ளீடு அல்லது செருகுதல்.
  • தரவு அல்லது தகவலை அதன் நினைவகத்தில் சேமித்து, தேவைப்படும் போதெல்லாம் அவற்றை மீட்டெடுத்தல்.
  • தரவைச் செயலாக்குதல் மற்றும் பயனுள்ள தகவலாக மாற்றுதல்.
  • வெளியீட்டை உருவாக்குதல் அல்லது தரவு அல்லது தகவலை மீட்டெடுத்தல்.
  • சாதனங்கள் மற்றும் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல்.
Computer tamil.png
ஒரு கணினியின் செயல்பாடுகள்
 
தரவு
தரவு என்பது முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள். அதை நம்மால் நேரடியாகப் பயன்படுத்த முடியாது. பொதுவாக, தரவு என்பது எண்கள், எழுத்துக்கள் மற்றும் குறியீடு வடிவில் இருக்கும்.
தகவல்
தகவல் என்பது முறைப்படுத்தப்பட்ட தரவுகளின் ஒரு வடிவம்.