PDF chapter test TRY NOW
கணினி என்பது நமது தேவைகளுக்கு ஏற்ப தரவு மற்றும் தகவல்களை மாற்றியமைகக உருவாக்கப்பட்ட ஒரு மின்னணு சாதனம் ஆகும். நாம் தரவைச் சேமித்து, அதை தகவலாக மொழிபெயர்க்கலாம். மேலும், கணினியை நாம் பல வழிகளில் பயன்படுத்தலாம்.


கணினி பரிணாமங்கள் - பழைய வகை மாற்றும் நவீன வகை கணினி
கணினிக் கண்டுபிடிப்பின் வரலாறு
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கணிதப் பேராசிரியரான சார்லஸ் பாபேஜ் ஒரு பகுப்பாய்வுப் பொறியை கண்டுபிடித்தார். ஆகையால், இவர் கணினியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

சார்லஸ் பாபேஜ்
அவர் வடிவமைத்த அடிப்படையான கட்டமைப்புதான் அனைத்து கணினிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதே போல், அகஸ்டா அடா லவ்லேஸ் என்கிற பெண், கணித செயல்பாடுகளுக்கு தேவையான கட்டளைகளை உருவாக்கியதால் முதல் கணினி நிரலா் என்று புகழாரம் சூட்டப்பட்டார்.
கணினி என்பது அதன் நினைவகத்தில் சேமிக்கப்பட்ட வழிமுறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு மின்னணு சாதனமாகும்.
இது உள்ளீட்டினை ஏற்று, குறிப்பிட்ட விதிகளின்படி தரவை செயலாக்கம் செய்து, பின்பு தகவலை வெளியீட்டாக உருவாக்குகிறது. மேலும், இத்தரவுகளை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கவும் இயலுகிறது.
மேலும், கணினியானது, வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டையும் உள்ளடக்கிய பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் ஒரு சாதனம் ஆகும்.

கணினியின் வன்பொருள் அமைப்புகள்
வன்பொருள் மற்றும் மென்பொருள் இடையே உள்ள வேறுபாடு:
- வன்பொருள், உள்ளீட்டுத் தகவலை உள்ளிட உதவுகிறது.
- ஆனால், மென்பொருளானது, உள்ளீட்டு தரவை செயலாக்குகிறது மற்றும் அதனை கணினித் திரையின் (வன்பொருள் சாதனம்) மூலம் வெளியீடாக வழங்குகிறது.
Important!
ஆகவே, கணினி என்பது மனிதர்களுக்கு ஈடாக கூற வேண்டுமெனில், வன்பொருள் மனித உடலைப் போன்றும், மற்றும் மென்பொருள் ஆன்மாப் போன்றும் செயல்படுகிறது.