PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமூன்றாம் தலைமுறை IBM -360 (1964-1971)
இந்தத் தலைமுறை கணினிகள், இரண்டாம் தலைமுறை கணினிகளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இதில் மின்மயப் பெருக்கிகளுக்கு பதில் ஒருங்கிணைந்தச் சுற்றுகள் (IC - Integrated Circuits) பயன்படுத்தப்பட்டன. இந்த ஒருங்கிணைந்த சுற்றுகள் சிலிக்கான் சில்லுகளால் உருவாக்கப்பட்டவை. மேலும், இதில் பல மின்மயப் பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதால், கணினிகளின் அளவானது வெகுவாகக் குறைந்தது.
மூன்றாம் தலைமுறைக் கணினி
இவ்வகைக் கணினிகள், முந்தைய தலைமுறையை விட மலிவானவையாக இருந்தன. மேலும், இவற்றின் செயலாக்க செயல்திறனை மேம்படுத்த இணை செயலாக்கத்தைப் பயன்படுத்தினர்.
இந்த கணினிகளின் தரவை நானோ வினாடிகளில் கணக்கிட முடியும். ஏனெனில், நிரலாக்கத்திற்கு, உயர்நிலை மொழிகள் பயன்படுத்தப்பட்டன. இத்தலைமுறைக் கணினிகள் பொது நோக்கத்திற்காகவும் மற்றும் வணிக நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டன.
இந்தத் தலைமுறைக் கணினிகளில், இயக்க மற்றும் பிற பயன்பாட்டு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
Example:
IBM - 360 series, CDC - 1700
நான்காம் தலைமுறை - (1971)
இந்தத் தலைமுறைக் கணினிகளில், நுண்செயலியைப் பயன்படுத்தினர்.
ஒரு நுண்செயலி , என்பது பொதுவாக சிலிக்கான் சில்லு எனப்படும் ஒற்றை சிப்பில் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான ஒருங்கிணைந்த சுற்றுகளைக் கொண்டது.
இதற்கு, மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு (VLSI - Very Large Scale Integration) எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
நான்காம் தலைமுறைக் கணினி
Important!
மேலும், ஒரு கன அடிக்கு, ஒரு பில்லியன் சுற்றுகள் என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நான்காம் தலைமுறை கணினிகளின் கணக்கீட்டு வேகம் பைக்கோ விநாடிகள் ஆகும். மேலும், இவை அளவில் சிறியவை, வேகமாக இயங்கக் கூடியவை மற்றும் நம்பகத் தன்மை உடையவை.
இவைகள் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தவதால், குறைந்த வெப்பத்தை உருவாக்குகிறதன.
Example:
ஆப்பிள், க்ரே - 1
ஐந்தாம் (தற்பொழுதைய) தலைமுறை
நான்காம் தலைமுறை கணினிகளுக்குப் பிறகு, இன்றைய கணினிகளான ஐந்தாம் தலைமுறை கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஐந்தாம் தலைமுறைக் கணினி
ஐந்தாம் தலைமுறை கணினிகள் அல்லது நவீனகாலக் கணினிகள் செயற்கை நுண்ணறிவின் (AI - Artificial Intelligence) அடிப்படையில் இயங்குபவை. அவை இன்னும் வளர்ச்சி நிலையில் உள்ளன. ஜப்பான் FGCS (ஐந்தாம் தலைமுறை கணினி அமைப்பு) \(1982\)இல் கண்டுபிடித்தது.
இந்த தலைமுறை கணினியானது அதிக கணினி வேகம் மற்றும் இணையான செயலாக்கத்துடன் கூடிய மைக்ரோ எலக்ட்ரானிக் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது.
Example:
IBM குறிப்பேடுகள், PARAM - 10000
Important!
குறிப்பு: ENIAC (மின்னணு எண் ஒருங்கிணைப்பு மற்றும் கணினி) \(1946\)இல் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கணினி ஆகும். இதுவே முதல் பொது நோக்கத்திற்கான கணினி ஆகும்.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9e/IBM_System_360_%E3%83%BC_Computer_History_Museum_%2830781538112%29.jpg/1024px-IBM_System_360_%E3%83%BC_Computer_History_Museum_%2830781538112%29.jpg