PDF chapter test TRY NOW
கணினியை எப்படி, எப்போது, யார் கண்டுபிடித்தார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
கணினியின் வரலாறு நாம் கேள்விப்பட்ட “மணிச் சட்டம்” (அபாகஸ்) என்ற எளிய கருவியில் இருந்து தொடங்குகிறது. இது, எப்படி, எவ்வாறு மற்றும் எப்போது கணினியின் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது என்பதை அறிந்து கொள்வோம்.
மணிச்சட்டம் (அபாகஸ்) - எண்ணிக்கை இயந்திரம் என்பது கிடைமட்ட கம்பிகளை வைத்திருக்கும் ஒரு மரத்தினால் செய்யப்பட்ட உலோகச் சட்டம் ஆகும். இது \(2000\) ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனில் கண்டுபிடிக்கப்பட்டது.
Important!
ஆரம்பக் கணினிகளில் கணினித் திரை மற்றும் நினைவகம் இல்லை.
\(1822\) ஆம் ஆண்டில், கணிதப் பேராசிரியரான சார்லஸ் பாபேஜ், "வித்தியாசப் பொறி" எனப்படும் ஒரு தானியங்கி இயந்திரத்தை வடிவமைத்தார், இது ஒரு வகை எண்ணும் இயந்திரமாகும். பஞ்ச் கார்டுகளில் தகவல்களைச் சேமிக்கக்கூடிய பகுப்புப் பொறி என்ற மற்றொரு இயந்திரத்தையும் அறிமுகப்படுத்தினார்.
நவீன கணினியைப் பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து பாகங்களையும் பாபேஜ் கண்டுபிடித்தார், ஆனால் \(1940\) இல் தான் நவீன கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

கணினியின் பரிணாப வளர்ச்சிகள்
Important!
சார்லஸ் பாபேஜ் கணினியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
முதலில் கணினிகள் கண்டுபிடிக்கபட்டதிலிருந்து, இவை விரைவாக உருவாகி முன்னேறியுள்ளன. பொதுவாக கணினியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை ஐந்து தலைமுறைகளாக தொகுக்கலாம்.
தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றம் 'தலைமுறை' என்று குறிப்பிடப்படுகிறது.
அனைத்து தலைமுறைகளும் பின்வருவனவற்றில் விளக்கப்பட்டுள்ளன.
முதல் தலைமுறை (1940-1956)
UNIVAC- I (Universal Automatic Computer - I) மற்றும் ENIAC (Electronic Numerical Integrator Analyser and Computer) போன்ற முதல் தலைமுறை கணினிகள் மிகப் பெரியவை.
மின்சுற்றுகளுக்கு வெற்றிடக் குழாய்களையும், நினைவகச் சேமிப்பிற்காக காந்த டிரம்களையும் பயன்படுத்தியதால் அவை பெரும் இடத்தை ஆக்கரமித்தன.
மேலும், இவ்வகை கணினிகள் அதிக அளவு மின்சாரத்தை உள்ளிழுத்து, அதிக வெப்பத்தை உருவாக்கின. இவ்வகைக் கணினிகள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்தன.
மேலும், இந்த முதல் தலைமுறை கணினிகளுக்கு இயந்திர மொழியைப் பயன்படுத்தினார்கள்.

முதல் தலைமுறை கணினி
இரண்டாம் தலைமுறை (1956-1963)
இத்தலைமுறை கணினிகளில் மின்மயப் பெருக்கிகள் மற்றும் காந்த மையம் என இரண்டு வகையான சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.
மின்மயப் பெருக்கிகள் (transistors), சுற்றுகளில் வெற்றிட குழாய்களுக்கு பதிலாக உபயோகிக்கப்பட்டது, மேலும் காந்த மையமானது, நினைவக சேமிப்பிற்காகக் காந்த உருளைகளுக்கு பதிலாக உபயோகிக்கப்பட்டது.
இரண்டாம் தலைமுறை கணினிகளில் மின்மயப் பெருக்கிகளின் உபயோகம் காரணமாக, இவை முதல் தலைமுறை கணினிகளை விட சிறப்பானதாகக் கருதப்பட்டது. ஏனெனில், இவை அளவில் சிறியவை, வேகமான திறன் கொண்டவை (மைக்ரோ விநாடிகள்), மலிவான ஆற்றல் திறனுள்ளதாகவும், மற்றும் நம்பகத் தன்மைக் கொண்டவையாகவும் இருந்தன.
இரண்டாம் தலைமுறை கணினிகளில், மின்மயப் பெருக்கிகள் வெற்றிடக் குழாய்களுக்குப் பதிலாக உபயோகிக்கபபட்டது. ஆனால், இவை அதிக வெப்பத்தை உருவாக்கின. இது கணினிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியது, ஆனாலும், முதல் தலைமுறையை கணினிகளுடன் ஒப்பிடும் பொழுது குறைவான சேதமாக இது இருந்தது.
இயந்திர மொழிக்கு பதிலாக, பொறி மொழி பயன்படுத்தப்பட்டது. இயந்திர மொழியை பொறி மொழியாக மாற்ற மொழி மாற்றி (Translators)பயன்படுத்தப்பட்டது.
Example:
IBM - 1920, IBM - 1401

இரண்டாம் தலைமுறை கணினிகள்