PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. பறவைகளின் முன்னங்கால்கள் நன்கு வளர்ச்சியடைந்து பறப்பதற்கு ஏற்ற ஒரு ஜோடி இறக்கைகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பறவைகள் இறகுகளால் மூடப்பட்ட படகு வடிவ உடலைக் கொண்டுள்ளன. இவ்வகை உடல் வடிவத்தைப் பெற்றிருப்பதால் அவை காற்றில் பறக்கும் போது குறைந்தபட்ச அளவு தடையே ஏற்படுகிறது.
பறவை
2. பறவைகளுக்கு வாய்க்குப் பதிலாக அலகு உள்ளது. அலகுகள் சாப்பிடுவதற்கும், இரையைப் பிடிப்பதற்கும், குஞ்சுகளுக்கு உணவூட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அலகுகளின் வெவ்வேறு வடிவங்கள்
3. பறவைகள் தங்கள் நுரையீரல் வழியாகச் சுவாசிக்கின்றன. இரட்டை சுவாசத்திற்கு உதவும் காற்றுப் பைகள் உள்ளன.
பறவையின் உடற்கூறியல்
4. அவை காற்றறைகளுடன் கூடிய மிகவும் எடைக் குறைவான காற்றழுத்த எலும்புகளைக் கொண்டுள்ளன. இந்த எலும்புகள் பறவைகளின் உடல் எடையைக் குறைக்கின்றன.
காற்றழுத்த எலும்புகளின் உள் கட்டமைப்புகள்
5. பொதுவாக நாம் பறவைகள் பறப்பதைப் பார்க்கிறோம், இருப்பினும் அவற்றால் தரையில் குதிக்கவும், நகரவும், ஓடவும் முடியும். மேலும் அவற்றின் ஒரு ஜோடி பின்னங்கால்களில் உள்ள மிகவும் கூர்மையான நகங்களின் உதவியுடன் மரக் கிளைகளை நன்கு பற்றிக் கொண்டு ஏற இயலும்.
பறவை நகங்களின் உதவியுடன் கிளையில் அமர்ந்துள்ளக் காட்சி
6. பறவையின் வாலானது அது பறக்கும் திசை மற்றும் இயக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
7. பறவைகளுக்கு வலுவான மார்பு தசைகள் உள்ளன, அவை பறக்கும் போது இறக்கைகளை அசைக்கும்போது காற்றின் அழுத்தத்தைத் தாங்க உதவுகின்றன.
8. ஒரே நேரத்தில், பறவைகள் ஒரு கண்ணால் ஒரு பொருளையும் மற்றொரு கண்ணால் மற்றொரு பொருளையும் பார்க்க முடிவது இருவிழிப் பார்வை எனப்படும்.
9. சில பறவைகளுக்கு நீச்சலுக்கு உதவும் விரலிடை சவ்வுகள் உள்ளன.
Example:
வாத்துகள் மற்றும் அன்னப்பறவை.
வாத்துகளில் விரலிடை சவ்வுகள்
10. பெரும்பாலான பறவைகளால் பறக்க முடியும், ஆனால் சில பறவைகளால் முடியாது.
Example:
பென்குவின் மற்றும் நெருப்புக்கோழி.
பறக்க முடியாத பறவைகள் : பென்குவின் மற்றும் நெருப்புக்கோழி
பறவைகளில் இடம்பெயர்தல்:
பருவ நிலை மாறும்போது ஒரு விலங்கு தன் இருப்பிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்வது, வலசை போதல் எனப்படும்.
பறவைகள் தீவிர சுற்றுச்சூழலிலிருந்து தப்பிக்க நீண்ட தூரம் பயணிப்பது இடம்பெயர்வு எனப்படும். கடுமையான குளிர்காலத்திலிருந்து தற்காத்துக் கொள்ள , பறவைகள் உலகின் பிற பகுதிகளிலிருந்து இந்தியா போன்ற வெப்பமான பகுதிகளுக்குப் பயணிக்கின்றன. மேலும், பறவைகள் மற்றும் விலங்குகள் குளிர்காலம் தொடங்கும் போது வெப்பமான இடத்திற்கு இடம்பெயர்ந்து குளிர்காலம் முடிந்தவுடன் திரும்பும்.
பறவைகள் முட்டையிடவும், தற்போதைய வாழ்விடத்தின் கடுமையான சூழலைக் கடக்கவும் இடம்பெயர்கின்றன. தமிழ்நாட்டில் வேடந்தாங்கல், கோடியக்கரை, கூடன் குளம் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.
சைபீரியா, ரஷ்யா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயங்களுக்கு இடம்பெயர்கின்றன.
சைபீரியக் கொக்குகள் சைபீரியாவிலிருந்து ராஜஸ்தானில் உள்ள பரத்பூர், ஹரியானாவில் உள்ள சுல்தான்பூர் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளின் மற்ற ஈர நிலங்களுக்குச் செல்கின்றன. கடுமையான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கவும், உணவைப் பெறவும் அவைகள் பயணம் செய்கிறன. சைபீரியன் கொக்கு ஒரு நாளில் சராசரியாக \(200\) மைல்கள் பயணிக்கும்.
சைபீரியக் கொக்கு
கோடை மற்றும் வறட்சி காலங்களில், நம் நாட்டிலிருந்து பறவைகள் இடம்பெயர்ந்து மற்ற வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. இந்த பறவைகள் வலசைபோகும் பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன.