PDF chapter test TRY NOW
ஒட்டகங்கள் வறண்ட மற்றும் குறைந்த மழைப்பொழிவு கொண்ட பாலைவனத்தில் வாழ்கின்றன. ஒட்டகத்தின் இனம் முதலில் \(45\) மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவில் தோன்றியது. பின்னர், அவை சுமார் \(3\) முதல் \(5\ \)மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தன. இப்போது, இவை பெரும்பாலும் பாலைவனங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. பாலைவனத்தில் வாழும் விலங்குகள் தீவிர வெப்பநிலை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும்.
ஒட்டகங்கள் பாலைவனத்தில் வாழ் வதற்கேற்ப தன் உடல் அமைப்பில் சிறப்பு தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
1. தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூடான பாலைவனத்தில் ஒட்டகம் வாழ்கிறது அதன் உடல் அமைப்பு தான் அது பாலைவனத்தில் வாழ உதவுகிறது. ஒட்டகத்திற்கு நீண்ட கால்கள் உள்ளன, அவை பாலைவனத்தில் உள்ள சூடான மணலிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன.

ஒட்டகம்
2. தண்ணீர் கிடைக்கும் போது ஒட்டகம் அதிக அளவு நீரைக் குடித்து, அதன் பிறகு அவற்றைத் தன் உடலில் சேமித்துக்கொள்ளும். ஒட்டகம் மிக வறண்ட பாலைவனத்தில் வாழும் போது தண்ணீரைச் சேமிக்கப் பின்வரும் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
- ஒட்டகங்கள் மிகச் சிறிய அளவு சிறுநீரை மட்டுமே வெளியேற்றுகின்றன.
- அவற்றின் சாணம் வறண்டு இருக்கும். அது மட்டுமல்லாமல் அவை தன் உடம்பிலிருந்து வியர்வையை வெளியேற்றுவது இல்லை.
ஒட்டகம் அதன் உடலிலிருந்து அதிக தண்ணீரை இழக்காததால், அதனால் தண்ணீர் குடிக்காமல் பல நாட்கள் உயிர் வாழ முடிகிறது.
4. ஒட்டகம் தன் முதுகின் பின்புறம் உள்ள திமில் பகுதியில் கொழுப்பைச் சேமித்து வைத்துக் கொள்ளும். அவசரக் காலத்தில், ஒட்டகம் கொழுப்பைச் சிதைத்து அது உயிர்வாழத் தேவையான ஆற்றலாகவும், நீராகவும் மாற்றுக்கொள்ளும். ஒட்டகத்தின் திமில், பாலைவனத்தின் கடுமையான சூழ்நிலையில் தண்ணீர் இல்லாமல் வாழ மற்றும் நீண்ட நேரம் பயணிக்க உதவுகிறது. இதனால் அதன் திமில் ஒரு கொழுப்பு இருப்பு அல்லது ஆற்றல் இருப்பு போல் செயல்படுகிறது.
திமில் பகுதியில் உள்ள கொழுப்பு வெப்பத்திலிருந்து ஒட்டகத்தைப் பாதுகாக்கும் ஒரு போர்வையாகச் செயல்படுகிறது. இதனால், பாலைவனத்தின் வெப்பம் மற்றும் கடுமையான காலநிலைக்கு எதிராக ஒட்டகம் குளிர்ச்சியாக இருக்கிறது.
5. ஒட்டகங்கள் மென்மையான மணலில் எளிதாக நடக்க உதவும் பெரிய மற்றும் தட்டையான பாதங்களைக் கொண்டுள்ளன. மேலும், அதன் தட்டையான பாதங்கள் உடல் எடை மற்றும் அது சுமக்கும் எடைக்கு எதிராக மணலில் மூழ்குவதை நிறுத்த உதவுகின்றன. அதோடு மணலின் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கின்றன. எனவே ஒட்டகங்கள் "பாலைவனத்தின் கப்பல்" என்று அழைக்கப்படுகின்றன.

ஒட்டகத்தின் பெரிய மற்றும் தட்டையான பாதங்கள்
6. கண்கள் மற்றும் காதுகளில் வீசும் புழுதிப் புயலில் இருந்து பாதுகாக்க ஒட்டகத்திற்கு நீண்ட கண் இமைகள் மற்றும் ரோமங்கள் உள்ளன.

ஒட்டகத்தின் நீண்ட கண் இமைகள்
7. ஒட்டகங்களுக்கு மெல்லிய, பிளவுபட்ட நாசித் துவாரங்கள் உள்ளன. புழுதிப் புயல் விளைவாக ஏற்படும் மணல் மற்றும் தூசி துகள்களைத் தடுக்க நாசித் துவாரங்கள் மூடிக் கொள்ளும்.

ஒட்டகத்தின் மூடிய நாசித் துவாரம்
8. ஒட்டகத்திற்கு மிக நீண்ட பெருங்குடல் உள்ளது, அது தண்ணீரை மீண்டும் உறிஞ்சி நீரைத் தேக்கி வைக்கிறது.
9. ஒட்டகங்களுக்குவாய், தோல் போன்ற மென்மையான திசுக்களால் உருவானது. எனவே, இது ஒட்டகங்கள் முள் மற்றும் கூரானச் செடிகளை மெல்ல உதவுகின்றன.

முள் செடிகளை உண்ணும் ஒட்டகம்
10. பாக்டிரியன் எனப்படும் இரட்டை திமில் ஒட்டக வகை, குளிர்காலத்தில் தங்களைப் பாதுகாக்க தடிமன் மற்றும் கரடுமுரடான மேல்சட்டையைச் (மேல் தோல்) சிறப்பு தகவமைப்பாகப் பெற்றுள்ளன. கோடையில், வெப்பநிலை அதிகரிக்கும் போது அந்த மேல்சட்டையைத் தானாகவே உதிர்த்து விடுகிறது.