
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதுருவக் கரடி
இவைகள், துருவப் பகுதியில் வாழ்கின்றன. துருவப் பகுதியில் உள்ள அதிகப்படியான குளிரிலிருந்து தன்னைத் பாதுகாக்க, தடிமனான தோல் மற்றும் வெண்மையான உரோமங்களைப் பெற்றுள்ளன.

துருவக் கரடி
பென்குயின்
துருவப் பகுதியில் வாழும் பறவையின் இனம் ஆகும். பென்குயின்களால் நீந்த இயலும். மேலும், நீந்துவதற்குத் துடுப்புகள் போன்ற இறகையும், நடப்பதற்கு இரண்டு கால்களையும் பெற்று உள்ளன.

பென்குயின்
வரையாடு
இவைகள் மலைப் பகுதியில் வாழும் விலங்குகள் ஆகும். மலைப் பகுதியில் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. அவை, ஒடுவதற்கு வலுவான குளம்புகளையும், குளிரிலிருந்து பாதுகாக்க நீளமான உரோமங்களையும் பெற்றுள்ளன.

வரையாடு
சிங்கம்
சிங்கங்கள் காடுகளில் வாழும் விலங்குகள். இவை, இரையைப் பிடிப்பதற்குக் கூர்மையான நகங்களையும் வலுவான மற்றும் வேகமாக ஓடும் தன்மையையும் பெற்றுள்ளன.

சிங்கம்