PDF chapter test TRY NOW
வெப்பம் அல்லது குளிர் பிரதேசத்தில் வாழும் விலங்குகள் அத்தகைய நிலைமைகளிலிருந்து தங்களைப் பாதுகாக்க சில சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. முக்கியமாக, விலங்குகளில் இருக்கும் இத்தகையத் தகவமைப்புகள் அவைகள் வாழும் குறிப்பிட்ட வாழ்விடத்திற்கு ஏற்ற வகையில் வாழ தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றன.
சில உயிரினங்கள் குளிர் காலத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள , அனைத்து செயல்களையும், செயல்பாடுகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்தச் செயலைக் குளிர்கால உறக்கம் என்கிறோம் . எ.கா. ஆமை

ஆமை
சில உயிரினங்கள் மிக அதிகமான வெப்ப நிலையிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள அனைத்து செயல்களையும், செயல்பாடுகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபடுகின்றன . இச்செயலைக் கோடைக்கால உறக்கம் என்கிறோம். எ.கா. நத்தை

நத்தை
கங்காரு எலிகளுக்கு பொதுவாகத் தண்ணீர் அருந்தும் பழக்கம் இல்லை. அது தான், உண்ணும் உணவிலிருந்ததே தன் உடலுக்குத் தேவையான நீரை உருவாக்கி பயன்படுத்திக் கொள்கிறது.

கங்காரு எலி
Important!
பொதுவாக, மலைப் பிரதேசங்களில் வாழும் நம் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள், தாவர வகைகளை உணவாய் உண்டு வாழ்கின்றன. அவை உணவைத் தேடி உண்பதற்கு, தன் உடலை அங்குள்ள பாறைகளின் சிறிய இடுக்குகளுக்கு ஏற்றவாறு சமநிலைப்படுத்தும் திறனைப் பெற்று உள்ளன.

நீலகிரி வரையாடுகள்