PDF chapter test TRY NOW
"நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்", இது நாம் முன்னோர் கூறிய பழமொழி. மனிதனுக்கு மிக சிறந்த சொத்து என்பது உடல் நலமே ஆகும்.
ஒரு மனிதன் தன் வாழ்வில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று உடல்நலம் , அதற்கு அவனுடைய சுகாதாரத்தைப் பேண வேண்டியது மிக முக்கியம்.
\(WHO\) என்னும் உலக சுகாதார மையம் நலத்தினைக் குறித்து பின் வருமாறு கூறுவதாவது,
”நலம் என்பது, ஒரு மனிதனின் முழுமையான உடல், மனம் மற்றும் சமூக நலனைக் குறிப்பதாகும்: இது நோயின்றி இருப்பதை மட்டும் குறிப்பதல்ல”.
தன்னிலைக் காத்தல் (homeostasis) என்பது யாதெனில்,
சுற்றம் அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடல் தன்னை தானே தகவமைத்துக் கொள்ளும், மேலும் உடலின் உள்ளே சமநிலைப்படுத்தும் நிலை ஆகும்.
நலத்தின் சின்னம்
சுகாதாரம் என்பது உடல்நலனைப் பராமரிக்க ஒரு மனிதன் ஏற்படுத்திக்கொள்ளும் நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகும்.
Example:
தினமும் பல் துலக்குதல், தினமும் குளித்தல்
தனி மனித சுத்தம் காத்தலின் காரணமாக நாம் நமது சுற்றுப்புறத் தூய்மையை மேம்படுத்தவும்,நோய் தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும். நலமான வாழ்வின் அடித்தளம் என்பது தனி மனித சுத்தமும் சுகாதாரமுமே என்பது மறுக்க முடியாத ஒன்று.
சுகாதாரத்தின் சின்னம்
உணவு
உடல்நலத்தைப் பேண முக்கிய கருவி ஆரோக்கியமான உணவு.
ஒரு விலங்கு, தாவரம் அல்லது மனிதன் தங்கள் உடலின் சரியான வளர்ச்சிக்காகவும் பராமரிப்பிற்காகவும் உட்கொள்ளுதல் உணவு என்று அழைக்கப்படுகிறது.
நம் உடலை சரியான முறையில் செயல்படுத்துவதில் உணவு முக்கியப் பங்கு வகிக்கின்றது.
எ.கா: சுவாசித்தல், செரிமானம், உடல் வெப்பம்
உணவின் கூறுகள்
ஒவ்வொரு உணவிலும் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆறு வகைப்படும், அவையாவன:
- கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து)
- புரதங்கள்
- கொழுப்புகள்
- வைட்டமின்கள்
- தாது உப்புக்கள்
- நீர்
இவை பல்வேறு வகையான மூலக்கூறுகளால் ஆனவை மற்றும் இவையே நம்மை நோய்களில் இருந்து பாதுகாத்து உடல் வளர்ச்சிக்கு பயன்படுகின்றன. இந்த ஆறு ஊட்டச்சத்துக்களை இரு வகைகளாக பிரிக்கலாம்.
பெரு ஊட்டசத்துக்கள்
பெரு ஊட்டசத்துக்கள்
- அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.
- கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள்
- எ.கா: அரிசி, பால், எண்ணெய்
நுண் ஊட்டச்சத்துக்கள்
நுண் ஊட்டச்சத்துக்கள்
- குறைந்த அளவில் உட்கொண்டால் போதும்.
- வைட்டமின்கள், தாது உப்புக்கள்
- எ.கா: காய்கறிகள், பழங்கள்