PDF chapter test TRY NOW
நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கார்போஹைட்ரேட்டுகள் மூலமாகவே கிடைக்கின்றன.
இது உணவில் அதன் நிலை பொறுத்து \(3\) வகைகளாக பிரிக்கப்படுகிறது.
கார்போஹைட்ரேட்டுகள்
வகைகள்
1. சர்க்கரை
உணவுகளில் இயற்கையாகவே நிறைந்து உள்ள சர்க்கரையை குறிக்கும். எ. கா: பழங்கள், தேன், பீட்ரூட், கரும்பு சர்க்கரை 2. ஸ்டார்ச்
ஸ்டார்ச் வகை குளுக்கோஸின் பாலிமர்கள். எ. கா: அரிசி, கோதுமை, சோளம், உருளை
3. நார்ச்சத்து உணவுகள்
இவை ஜீரணிக்க முடியாத சிக்கலான பாலிசாக்கரைடுகள். எ. கா: முழு தானியங்கள், கொட்டை வகைகள்
Important!
உடலுக்கு நல்லது எனினும் அதிக அளவில் உட்கொள்ளும்போது சர்க்கரை நோய், உடல் பருமன், மேலும் பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
நாம் உணவில் அதிக அளவில் உள்ளது சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் ஆகும். அதனை ஒரு சோதனையின் மூலம் கண்டு அறியலாம். அது பின்வருமாறு,
செயல்பாடு 1: அயோடின் சோதனை
நோக்கம்:
உணவில் ஸ்டார்ச் வடிவில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதா என கண்டு அறியவும்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளைக் கிழங்கு, சொட்டுக் குழாய், நீர்த்த அயோடின் கரைசல்
செய்முறை:
- வேகவைத்த உருளைக்கிழங்கை மசிக்கவும்.
- மசிக்கபட்ட உருளைக்கிழங்கில் \(2-3\) சொட்டு நீர்த்த அயோடின் கரைசலை சேர்க்கவும்.
- உணவில் நிறத்தின் மாற்றத்தை கவனிக்கவும்.
விளைவு:
உருளைக்கிழங்கு கருநீல நிறமாக மாறும்.
அயோடின் சோதனை
வேகவைத்த உருளைக்கிழங்கில் சேர்க்கப்படும் அயோடின், உருளைக்கிழங்கில் இருக்கும் மாவுச்சத்துடன் வினைபுரிகிறது. இது நீல - கருப்பு நிறத்தில் ஸ்டார்ச் - அயோடின் கலவையை உருவாக்குகிறது. இவ்வாறு, நீல - கருப்பு நிறத்தின் தோற்றம் உணவுப் பொருளில் ஸ்டார்ச் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
செயல்பாடு 2: பெனிடிக்ட் சோதனை
நோக்கம்:
உணவில் குளுக்கோஸ் போன்ற எளிய சர்க்கரையின் இருப்பினை கண்டு அறிதல்.
பெனிடிக்ட் கரைசல் என்பது சோடியம் மற்றும் செப்பு உப்புகளின் தெளிவான நீலக் கரைசல்.
விளைவு:
எளிய சர்க்கரைகளின் முன்னிலையில், நீலக் கரைசல் சர்க்கரையின் அளவைப் பொறுத்து பச்சை, மஞ்சள் மற்றும் செங்கல் - சிவப்பு நிறமாக மாறும்.
பெனிடிக்ட் சோதனை