PDF chapter test TRY NOW

நுண்ணோக்கி மூலம் மட்டுமே காணக்கூடிய மற்றும் நோய்களைப் பரப்பும் உயிரினங்கள் நுண்ணுயிரிகள் எனப்படும்.
shutterstock_321729635.jpg
நுண்ணோக்கி
 
சுத்தத்தை அலட்சியம் செய்தால் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சீதபேதி, பல்சொத்தை, சேற்றுப்புண், பொடுகு போன்ற பல நோய்கள் ஏற்படும்.
 
12.png
நுண்ணுயிரிகள்
 
நுண்ணுயிரிகளில் \(4\) பிரிவுகள் உள்ளன.
  • பாக்டீரியா
  • வைரஸ்
  • புரோட்டோசோவா
  • பூஞ்சைகள்
பாக்டீரியா
 
இது புரோகேரியோட்டிக் வகுப்பைச் சேர்ந்த நுண்ணுயிரி ஆகும். இதற்கு உட்கரு கிடையாது மற்றும் செல்களைப் போல இது சவ்வினால் சூழபட்ட நுண்ணுறுப்புகளைக் கொண்டு இருக்காது.
 
தன்மை
  • ஒட்டுண்ணிகளாகவோ அல்லது தன்னிச்சையாகவோ வாழும்.
  • உடலின் திசுக்களை பாதிக்கும்.
  • உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியிடும்.
பாக்டீரியா நோய்கள்
 
நோய்கள்
பரவும் முறை
காலரா/வயிற்றுபோக்கு அழுக்கான நீர்
நிமோனியா
இருமல் அல்லது தும்மல் மூலம்
வெளியேறும் திவலைகளை சுவாசித்தல்.
டெட்டனஸ்/கக்குவான் இருமல்காயங்களில் பாக்டீரியா தொற்று
காசநோய்
இருமல் அல்லது தும்மல் மூலம்
வெளியேறும் திவலைகளை சுவாசித்தல்.
டைபாய்டு காய்ச்சல்சுத்தம் இல்லாத நீர் அல்லது உணவு

shutterstock_783152101.jpgshutterstock_2000796971.jpg
பல்சொத்தை மற்றும் டைபாய்டு காய்ச்சல்
  
வைரஸ்
 
இது நோய் தொற்று ஏற்படுத்தக்கூடிய ஒரு நுண்ணுயிரி ஆகும். நியுக்களிக் அமிலம் புரத உரையால் மூடப்பட்டு இருக்கும். இது அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும் (தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், பிற நுண்ணுயிர்கள்).
 
உயிருள்ள செல்களின் உள்ளே பெருகும் தன்மைக் கொண்டது. ஊடுருவும் செல்லில் அதன் தன்மையை மாற்றி அல்லது பாதித்து நோயை உண்டாக்கும்.
 
13.png
வைரஸின் வடிவம்
ஒரு வைரஸ் டி.என்.ஏ வுக்குப் பதிலாக ஆர்.என்.ஏ இருந்தால் அது ரெட்ரோ வைரஸ் எனப்படும்.
வைரஸ் மூலம் பரவும் நோய்கள்
  • கல்லீரல் ஒவ்வாமை
  • சாதாரண சளி
  • இன்புளுயன்சா
  • சின்னம்மை
  • பெரியம்மை
  • இளம் பிள்ளை வாதம்
  • தட்டம்மை
Sick_Shutterstock.pngChicken pox 2_Shutterstock.png
சாதாரண சளி மற்றும் சின்னம்மை