![](http://uploads.cdn.yaclass.in/upload/pumpa/img_4.png)
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉடல் நலத்தை காக்கவும் , மேம்படுத்தவும் மற்றும் உடல் தகுதியை சரியாக பராமரிக்கவும் உடலுக்கு நாம் கொடுக்கும் செயல்பாடுகளே உடற்பயிற்சி ஆகும்.
![14.png](https://resources.cdn.yaclass.in/99f51e00-e8db-4e04-85b5-c52db25e9744/14w531.png)
உடற்செயல்
இது பல்வேறு வகையான செயல்பாடுகளாக பிரிக்கப்படும். நடனம், யோகா, குழு விளையாட்டுகள், தனி நபர் விளையாட்டுகள், சுறுசுறுப்பாக இருத்தல் போன்றவை.
![vecteezy_covid-and-technology-at-home-gym_ZM0321_generated.jpg](https://resources.cdn.yaclass.in/f0e01af3-75d5-430a-b1fc-1e59696da3ff/vecteezycovidandtechnologyathomegymZM0321generatedw358.jpg)
![vecteezy_virtual-running-with-treadmill-concept_.jpg](https://resources.cdn.yaclass.in/9d9d8a34-3a61-421b-bd9e-bb534e46a280/vecteezyvirtualrunningwithtreadmillconceptw270.jpg)
உடற்பயிற்சிகள்
உடற்பயிற்சி பின்வரும் காரணங்களுக்கு மிகவும் அவசியம்.
- உடல் வளர்ச்சிக்கு அவசியம்.
- இளமையான தோற்றம் கொடுக்கும்.
- இதயம் சீராக இயங்க உதவும்.
- தசைகளின் வளர்ச்சிக்கு முக்கியம்.
- எடை குறைக்க அல்லது பராமரிக்க முக்கியம்.
- விளையாட்டு திறம் மேம்படும்.
- மன அழுத்தம் குறையும்.
- உடல் பருமானால் ஏற்படும் விளைவுகள் குறையும்.
ஓய்வு
- உடலுக்கும் மட்டும் இன்றி உள்ளத்திற்கும் ஓய்வு கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் உண்ணும் ஊட்டச்சத்து மிக்க உணவு போலவே, ஓய்வும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஒரு சராசரி மனிதனுக்கு \(7 - 8\) மணிநேர உறக்கம் மிகவும் முக்கியம் ஆகும்.
- உறக்கமின்மை உடல் பருமன் , மன உளைச்சல், மன அழுத்தம், உடல் சோர்வு, தலைவலி போன்ற பல நோய்களுக்கு வழி வகுக்கும்.
தூய்மை
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி தூய்மை என்பது யாதெனில்,
“உடல் நலத்தைப் பராமரிக்கவும், நோய்கள் பரவுவதைத் தடுக்கவும் உதவக்கூடிய நிலை மற்றும் நடைமுறைகளையே , தூய்மை குறிக்கிறது”.
தனிமனித சுத்தம்
உடல் நலத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் தனி மனித சுத்தத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். குளித்தல், நகம் வெட்டுதல், பல் துலக்குதல், கை கழுவுதல், உடை மாற்றுதல் போன்றவை இதில் அடங்கும். மேலும் ஒரு மனிதன் தன்னை சுற்றி உள்ள வீடு, வேலை செய்யும் இடம், கழிவரைகள் போன்ற இடங்களையும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டியது அவசியம்.
![555mtk1j140917 (1).jpg](https://resources.cdn.yaclass.in/33cade5e-43eb-4e72-a878-d5734a58f7f9/555mtk1j1409171w431.jpg)
தனிமனித ஒழுக்க வழிமுறைகள்
தனி மனித சுத்தத்தை கடைபிடிக்க வேண்டிய கால இடைவெளி
பகுதிகள் | ஆலோசனைகள் |
கண் | தினம் காலையில், முகம் அசுத்தம் அடையும் போது |
முடி | ஒரு நாள் விட்டு ஒரு நாள், வாரம் இரு முறை. |
உடல் | தினம் ஒரு முறை அல்லது இரு முறை |
வாய் | தினம் இரு முறை, சாப்பிட்ட பின் வாய் கொப்புளிக்கவும். |
பாதம் | தினமும் |
கை | சாப்பிடும் முன், அழுக்கான அசுத்தமானவற்றை தொட்டால், சுத்தமான பொருளை தொடும் முன் |
ஆடை | தினம் ஒரு முறை அல்லது இரு முறை |
வாய்வழி நீரேற்றக் கரைசல் (Oral Rehydration Solution - \(ORS\))
வாந்தி அல்லது பேதி போன்றவற்றால் உடலில் உள்ள நீரின் அளவு மிகவும் குறைந்து விடும். அது பல தீவிர உடல் பிரச்சனைகளை உண்டாக்கும். இதனை, வாய்வழி நீரேற்றக் கரைசல் (\(ORS\)) அடிக்கடி பருகுவதன் மூலம் சரி செய்யலாம்.
![PhotoTrials Shutterstock.jpg](https://resources.cdn.yaclass.in/fde623ff-7547-4738-ae0f-c0c95471994a/PhotoTrialsShutterstockw300.jpg)
வாய்வழி நீரேற்றக் கரைசல்
செய்முறை
- ஒரு லிட்டர் கொதிக்க வைத்த தண்ணீரை எடுத்து குளிர்விக்க வேண்டும்.
- அதில் அரை தேக்கரண்டி உப்பு மற்றும் \(6\) தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும்.
- தேவைப்பட்டால் சில துளிகள் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.
- சர்க்கரை மற்றும் உப்பு தண்ணீரில் கரைக்கும் வரை நன்கு கலக்கவும்.
- இப்போது, \(ORS\) தயாராக உள்ளது மற்றும் நீரிழப்பு, வாந்தி அல்லது தளர்வான இயக்கத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கப்படுகிறது.
![9 - Copy.png](https://resources.cdn.yaclass.in/7c32767f-b100-4065-bb50-8b5a97f140fe/9Copyw400.png)
வாய்வழி நீரேற்றக் கரைசல் தயார் செய்யும் முறை
Reference:
https://www.vecteezy.com/vector-art/304386-simple-coloured-sketches-of-people-taking-a-bath
https://www.vecteezy.com/vector-art/2173401-a-girl-doing-exercise-through-virtual-reality
https://www.vecteezy.com/vector-art/3416717-virtual-running-with-treadmill-concept