PDF chapter test TRY NOW
காற்று இல்லாமல் உலகில் எதுவும் இல்லை. அவற்றின் பயன்கள் எண்ணில் அடங்காதவை. சிலவற்றைப் பின் வருமாறு காண்போம்.
1. அனைத்து உயிரினங்களும் (தாவரம்,விலங்கு) போன்றவை சுவாசிக்க உதவும்.
சுவாசித்தல்
2. எரிபொருள்களை எரிக்க காற்றுத் தேவை. எ.கா: மரக்கட்டை, நிலக்கரி, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்.
எரித்தல்
3. வாகன டயர்களில் அழுத்தப்பட்ட காற்று பயன்படுகிறது.
வாகன டயர்
4. இயற்கையின் முக்கிய நிகழ்வான நீர் சுழற்சியில் காற்றின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.
நீர் சுழற்சி
5. புவிக்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட கதிர்வீச்சில் இருந்து வளிமண்டல ஓசோன் படலம் பாதுகாக்கின்றது.
சூரிய கதிர்கள்
சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் பின்வருமாறு:
6. சுவாசப் பிரச்சனையுள்ள நோயாளிகள்
சுவாசக் கோளாறுகள்
7. உயர்ந்த மலைச் சிகரங்கள் ஏறுவோர், ஆழக்கடல் நீச்சல் செல்வோர் ஆக்ஸிஜன் உருளைகள் அணிந்து செல்வர்.
மலை ஏறுவோர் , ஆழக்கடலில் நீந்துவோர்
8. காற்றாலைகளில் வீசும் காற்று மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. காற்றாலைகள் நீர் இறைத்தல் , மாவு அரைத்தல் போன்ற செயல்களுக்கும் பயன்படுகிறது.
காற்றாலைகள்
9. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
மகரந்தச் சேர்க்கை
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Water_cycle_blank.svg
https://commons.wikimedia.org/wiki/File:Nasalprongs.JPG